தமிழி எழுத்து மற்றும் தமிழ் எழுத்துக்கள் ஒரு ஆய்வு
பண்டைய கால மனிதர்கள் காடுகளில் இருந்ததால் உணவுக்காக விலங்குகளை வேட்டைக்கு சென்று தன் இருந்த இடத்திற்கு வரவேண்டியதற்காக செல்லும் பாதையில் உள்ள மரம்,செடி, கொடிகளை அடையாளமக ஒடித்து வைத்து சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான கருத்தாக ஏற்டுத்திக் கொண்டன்.பின்பு சைகைகள் மூலம் தனது கருத்துக்களை மற்றவர்க்கு பகிர்ந்துகொண்டன்
கருத்தொழுத்து:
சைகை மூலம் பேசிக்கொண்டனர். பின்பு பின் கூற வந்த கருத்தை மண் தரை,இழை,தழை,மரம் அவற்றிலும் ஓவியமாக வரைந்து கருத்தை தெரிவித்தன் இவை விரைவில் அழிந்து விடுதால் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பாறைகளில் ஓவியமாக வரைந்தன் இவை நீண்ட நாட்கள் அழியாமல் இருந்த. இவற்றை முதலில் கரித்துண்டுகளைக் கொண்டும் பின்பு இயற்கை முறையில் கிடைக்காகூடிய கருப்பு,பச்சை,காவி வண்ணங்களைக் கொண்டு வண்ணம் தீட்டி தன் கூற வந்த கருத்தை இவ் ஓவியத்தின் மூலம் கருத்தெழுத்தாக தெரிவித்தான்
சித்திர எழுத்து:
ஓவியம் வரைந்து கருத்தை கூறுவதற்கு நீண்ட கால விரையம் ஏற்பாடுதால். சித்திரமாக கோடுகளை வரைந்தான்.தன் கூற வேண்டிய கருத்தை விரைவில் தெரிவிக்க கூடியாதாகவும் இருந்தாது. சித்திரம் வரைய குறுகிய காலமே ஆகியது மேலும் ஒன்றுக்கு மேல் என்றால் நாய் என்கிற போது நாயின் தலையை வரைந்து அதன் அருகில் புள்ளி வைத்துக்கொண்டன்
குறியீடுகள்:
குறியீடுகள் எழுத்தின் முன்னோடி ஆகும். குறியீடுகளை தம் புழங்கும் பொருட்களிலேயே குறியீடுகளை பெறித்துக்கொண்டன். இந்த குறியீடுகள் வணிகர்காளல் ஏற்படுத்தியவையாக இருக்காலம் தமிழகத்தில் நடைபெற்ற அழாய்வுகளான ஆதிச்சநால்லூர்,கொடுமணல்,பொருந்தல்,பூம்புகர்,அழகன்குளம்,தேருவேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் பானை ஓடூகள்,ஆபரங்களில்லும் கிடைத்துள்ளன.இக்குறியீடுகள் ஓரு குறியீடு உள்ளவையும் மேலும் ஓன்றுக்கு மேற்பட்ட குறியீடு உள்ளவையும் கிடைக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே கிடைக்க கூடியவையாகும். இக்குறியீடுகளின் வளர்ச்சியே தமிழி (பிராமி) எழுத்துக்கள் ஆகும்
தமிழி (பிராமி)
இந்தியாவில் அசோகர் காலத்தில் இருவகையான எழுத்துக்கள் வழக்கில் இருந்துளள்ளன.
1.பிராம்மி
2.காரோத்தி
இவ்வெழுத்துக்களை வடசெமிடிக் பகுதியினர் தோற்றுவித்ததாக கூறுவர். இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிக்கும் பிராமி எழுத்து வகையே முன்னோடி என்ற கருத்து உள்ளது. வட இந்தியாவில் வழங்ப்பட்டது வட பிராமி என்றும். தென் இந்தியாவில் வழங்கப்பட்டது தென் பிராமி என்றும் கூறுவர்.ஆனால் தமிழகத்தில் அசோகர் காலத்திற்கு முன்பே பல நூற்றிண்டுகளுக்கு முன்பே தமிழி எழுத்து நடைமுறையில் இருந்துள்ளது இது தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு முலம் தெரியவந்துள்ளது.
பிராமியின் சாம காலத்திய தமிழக எழுத்து
சமயவங்கசுத்த என்னும் சமண நூலில் 18 வகையான எழுத்துக்களை குறிக்கப்பட்டுள்ளன. இந்நூல் கி.பி.முதல் நூற்றாண்டைச் சார்ந்தது.இது எழுத்துக்களின் பெயரைக் குறிக்கும் பழமையான நூல் ஆகும்
இதில் பிராமி, கரோத்தி என்ற பெயர்களோடு தமிழி என்ற பெயரும் குறிக்கப்படுகிறது. இது தமிழ் எழுத்து ஆகும். ஆக பிராமி சம காலத்திலேயே தமிழி எழுத்து இருந்துள்ளதை அறியலாம். ஆனால் வட பிராமியில் இல்லாத சிறப்பொலி எழுத்ததுக்கள் ழ,ள,ற,ன, தமிழியில் உள்ளன
தமிழி எழுத்து கண்டுபிடிப்பு:
மதுரை மாட்டம் கீழவளவு எனும் ஊரில் 1903ல் வெங்கோபராவ் தமிழி கல்வெட்டை கண்டுபிடித்தார்
நெல்லை மாவட்டம் கலெக்டர் கெமைடு எனும் ஊரில் கண்டுபிடித்தார்
திராவிடி எழுத்து:
இலலிதவிசிதரம் எனும் பௌத்த நூல் 5மற்றும் 6நூற்றாண்டை சர்ந்தது ஆகும். 64 வகையான எழுத்துக்கள் குறிக்கப்பட்டடுள்ன. தமிழி தெலுங்கு, கன்னடம்,கிரந்தம் ஆகியவை ஒன்று போல் இருந்ததால் இவை திராவிடி எனும் பெயர் வந்தது.
முதல் தமிழி எழுத்து சாசனம். இந்தியாவில் பிராமி எழுத்தில் பல சாசனங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் 'ஏரன்' என்ற இடத்தில் கிடைத்த ஒரு காசில் 'தமபஸ' என எழுதப்பட்டுள்ளது. இது நமக்கு கிடைத்த தொன்மையான பிராமி எழுத்தாகும். இதில் வலம் இருந்து இடமாகவும் பின்னர் இடம் இருந்து வலமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
பிராமி முன்பே தமிழி எழுத்து:
இந்தியாவில் பிராமி எழுத்தில் இருந்தே அனைத்து மொழி எழுத்துளும் உருவாகின என்று கூறப்பட்டு வந்தது. பிராமி எழுத்து கி.மு 2ம் மற்றும் 3ம் நூற்றாண்டுகளில் உள்ள அசோகர் கால எழுத்துக்கள் தன் கிடைக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆழாய்வுகள் மூலம் பிராமிக்கு முன்பு பல நூற்றாண்டுகளாக தமிழி எழுத்து பயன்பட்டில் இருந்துள்ளது வந்துள்ளது என்று கீழடி அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் எழுத்துக்கள் கிடைத்த ஓடுகளை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்ததில் கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த தமிழி எழுத்து என்றும். கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளை ஆய்வு செய்ததில் அவை கி.மு. 7ம் நூற்றாண்டுக்கு முன்பு உள்ளவை. ஆதிச்சல்லூரில் பானை ஓடுகளில் எழுத்துக்கள் கிடைத்துள்ன.ஆனால் அங்கு மக்கள் கி.மு. 9ம் நூற்றாண்டுக்கு முன்பே வழுந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் சங்க காலம் என்பது 6ம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்துள்ளது என அறிய முடிகிறது
தமிழி எழுத்ததுக்கள் உள்ள இடங்கள்:
மலைகள்,இயற்கையான அமைந்த குகைத்தளங்கள், குகை கல்வெட்டு,நடுகல்,கோயில்கள், தூண்கள்,சுமை தாங்கி கற்கள், பானை ஓடுகள்,காசுகள்,செப்போடுகள்,சுனைகள் பேன்றவைகளில் காணப்படுகின்றன.
காசுகளில் உள்ள தமிழி எழுத்து:
திருவண்ணமலை மாவட்டம் செங்கம் தலுக்காவில் ஆண்டிப்பட்டடியில் சங்க கால காசு கிடைத்துள்ளது இதில் தின்னன்,எதிரான்,சேந்தன் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மலைப்பகுதியில் உள்ள தமிழி எழுத்து:
தமிழ் நாட்டில் மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம் போன்ற பகுதியில் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் மன்னர்கள் மற்றும் வணிகர்கள் சமண முனிவர்களுக்கு படுக்கை அமைத்தவை பற்றியே குறிப்பிடுகின்றன.
பானை ஓடுகள்:
தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் குவிரன்,சத்தன், திசன்,சந்தன்,ஏனன், மடச்சி,வேந்தன், கிள்ளி,போன்ற பெயர்களிலும் கிடைத்துள்ளன..
தமிழி கல்வெட்டுக்களைப் படித்தவர்கள்:
தமிழி எழுத்துக்களை கல்வெட்டுளில் உள்ளவையே முதன்முதலில் எச்.கே.கிருஷ்ண சாஸ்திரி தான் படிக்க முயன்றார்
இவ்வொழுத்துக்களைப் படிக்க தெளிவான வழி வகுத்தர் கே.வி. சுப்ரமணிய அய்யர் அவரே பண்டைய தமிழியின் சிறப்பொழி எழுத்துக்களான ழ,ள,ற,ன என்பவற்றைக் கண்டறிந்தர். மேலும் பெரும்பாலான கல்வெட்டுக்களை படித்துக்கட்டினார் இதனால் சுப்ரமணிய அய்யரை தமிழி கல்வெட்டுகளின் தந்தை என போற்றுகின்றனர்
திரு.ஐ.மாகதேவன் அவர்கள் புகளூர் கல்வெட்டைப் படித்து தெளிவு ஏற்படுத்தினார்
திராவிடி எழுத்து:
இலலிதவிசிதரம் எனும் பௌத்த நூல் 5மற்றும் 6நூற்றாண்டை சார்ந்தது ஆகும். இதில் 64 வகையான எழுத்துக்கள் குறிக்கப்பட்டடுள்ன. தமிழி தெலுங்கு, கன்னடம்,கிரந்தம் ஆகியவை ஒன்று போல் இருந்ததால் இவை திராவிடி எனும் பெயர் வந்தது.
வட்ட எழுத்து:
தமிழ் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்ததிய வட்ட வடிவ வரிவடிவங்களை மிகுதியாகக் கொண்ட ஒரு வகை எழுத்துக்களை வட்டெழுத்து சுட்டுவர். இவ்வட்டெழுத்தை தெக்கன் மலையாளம்,நாநாமேன எழுத்து பேன்ற பிற பெயர்களாலும் குறிப்பபிடுவர். இது பிராமி எழுத்தில் இருந்து தன் வளர்ச்சி அடைந்துள்ளன என்றும் கூறுவர். தொடக்க காலத்தில் வட்டடெழுத்துக்களின் உருவாக்கம் குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை முன் வைத்தன்னார். ஆனால் இவர்கள் கூறிய காலத்தில் தமிழி எழுத்தில் இருந்து தன் வட்டெழுத்து உருவானது என்ற உண்மையை எடுத்துக் கூறுவதற்கு சான்றுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை ஆனால் அணமைக் காலத்தில் கண்டறியப் பட்டுள்ள அறச்சலூர், இருளப்பட்டி, பூலாங் குறிச்சி, இந்தளூர், அரசலாபுரம், அம்மன் கோவில்பட்டி போன்ற பல்வேறு இடங்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகள் தமிழி(தமிழ் - பிராமி) எழுத்திலிருந்தே வட்டெழுத்து வளர்ச்சியடைந்துள்ளது என்பதை தெளிவாக்கியுள்ள.
தொன்மையான வட்டெழுத்து கல்வெட்டு:
செஞ்சிக்கு அருகில் திருநாதர் குன்று எனுமிடத்தில் கிடைத்த கல்வெட்டே வட்டெழுத்தில் அமைந்த கல்வெட்டுக்களில் மூத்ததாக கருதப்படுகிறது. இது தனி வட்டெழுத்தாக எழுதபடவில்லை தமிழியும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் கானும்போது அரசலூரில் கிடைத்த கல்வெட்டே வட்டெழுத்ததின் தொடக்க காலமாக கி.மு. 3ம் நூற்றாண்டை துணிந்து கூறலாம்.
தற்பேது உள்ள தமிழ் எழுத்து:
தமிழ் பிராமியிலிருந்து ஆரம்பித்து பிறகு பல்லவ கிரந்தம், வட்டெழுத்து வழியாக வளர்ச்சியடைந்த தமிழ் எழுத்து வடிவம், சோழர்கள் காலத்தில் தற்போதைய வரிவடிவத்துக்கு இணையாக மாற்றப்பட்டது. 8ம் நூற்றாண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த வடிவம் 11ம் நூற்றாண்டு தமிழகம் முழுவதும் பரவியது. அன்றிலிருந்து இன்றுவரை சிற்சில மாற்றங்களுடன் இப்போது பயன்பாட்டில் உள்ளது. தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் உள்ள முக்கிய வேற்றுமை க என்று எழுத்து அது தொடர்பான எல்லா ஒலிக்கும் பயன்படுத்தப் படுவது. ஹிந்தி முதலான மொழிகளில் க, க்க என்று ஒலிகளை மாறுபடுத்தும் எழுத்துக்கள் உண்டு. இந்தத் தமிழ் வடிவத்தில் இது மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டது.
பின்பு தமிழ் எழுத்துச் சீரமைப்பு என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிவடிவத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்பட்டதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுமான முயற்சிகளாகும். தமிழை முதலில் தமிழி எழுத்து வடிவம் கொண்டு எழுதினர். பின்பு தமிழின் எழுத்து வடிவம் பல மாற்றங்களை கண்டு இன்றைய நிலையில் நிலைத்துள்ளது. அச்சுத் துறை வளர்ந்த பின் அதன் தேவைக்கேற்ப அச்சுக் கோர்க்கவும், தட்டச்சு முறைக்காகவும் தமிழ் எழுத்துக்கள் மாற்றப்பட்டுள்ளன. 21ம் நூற்றாண்டில் கணினியில் தமிழ் பயன்பாடு அதிகரித்த பின்னர் மீண்டும் தமிழ் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆங்கிலம் முதலான மொழிகளைப் போல் குறைந்த எண்ணிக்கையில் எளிய வகையில் தமிழ் எழுத்துக்கள் இல்லாமல் மிகுதியான எண்ணிக்கை கொண்டிருப்பது கணிப்பொறி காலத்திற்கு ஏற்றதன்று என்று வழக்காடித் தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க வேண்டுமென்று பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
தொல்காப்பியர் கால எழுத்து:
தொல்காப்பியம் முதலெழுத்துக்கள்முப்பது என்றும், சார்பெழுத்துக்கள் மூன்று என்றும் வரையறை செய்கிறது. "மெய்யோ டியையினும் உயிரியல் திரியா” என்று உயிர்மொழி எழுத்துக்களுக்கு அளவு மட்டும் கூறி அவற்றின் எண்ணிக்கையை உய்த்துணர வைக்கிறது. எனவே உயிர்-12, மெய்-18, சார்பு-3, உயிர்மெய்-216 என எழுத்து வடிவங்களைத் தொல்காப்பியம் சுட்டி நிற்கிறது.
பனையோலை எழுத்து:
பனை ஓலையில் தமிழ் எழுத்துகளை எழுதிய காலத்தில் சார்பெழுத்துக்களில் ஒன்றான ஆய்தம் மட்டும் எழுத்தாகக் கொள்ளப்பட்டுத் தமிழ் எழுத்துக்கள் 247 எண்ணிக்கையினவாகும். எழுதும் பொருட்கள் மாறியபோதெல்லாம், எழுத்துக்களை மாற்றும் முயற்சிகளும் நடந்துள்ளன.
வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம்:
முதன்மைக் கட்டுரை:
வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
தமிழ்நாட்டில் அச்சிடல் பரவலான பின்னால் பனையோலையில் எழுதுவதற்கு ஏற்றாற்போல இருந்த தமிழ் எழுத்துகள் சிலவற்றை வீரமாமுனிவர் மாற்றியமைத்தார். ஏகார ஓகார ஒலிகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு முறை (”தே”, தோ); எகர-ஏகார; ஒகர-ஓகார முறைகளை வேறுபடுத்த காலில் கொம்புகளையும் சுழிகளையும் பயன்படுத்துதல், நெடிலைச் சுட்டும் காலை வளைவு கொடுத்து ரகரத்திலிருந்து வேறுபடுத்தும் முறை ஆகியவை அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஆகும்.
1935 ல் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினர். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, ற).
1978-79 ல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய் (ஐ), அவ் (ஔ)தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.
முடிவுரை:
எழுத்துக்கள் பல்வேறு காலங்களில் பல நிலைகளில் வளர்ச்சியடைந்தள்ளன. இவை கருத்தெழுத்தாகவும்,ஓவியெழுத்தாகவும்,சித்திரெழுத்தாகவும்,குறியீடுகளாகவும்,தமிழி (பிராமி)எழுத்தாகவும்,வட்டெழுத்தாகவும்,தமிழ் எழுத்தாகவும் என என பல நிலைகளில் வளர்ச்சியடைந்து சீர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
அன்புடன்,
பாலமுருகன்,
கல்வெட்டு மற்றுறம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்.