சேரிகள் ? சோழர் காலத்து கல்வெட்டுகள் !
சேரிகள் ? சோழர் காலத்து கல்வெட்டுகள் !
(இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை உண்மை வரலாறை ஆதாரத்தோடு விளக்கும் பகுதி)
சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் ‘சேரி’ எனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.
சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர்.
அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு பள்ளர் குடியிருப்பு , ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரி’ என்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.
தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் பள்ளர்ச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள் பள்ளர்கள் அனைவருமே தீண்டப்படாதவர்களாகக்
கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது. சிலர் இன்த தீண்டாச்சேரி என்பது பிறரை தீண்டா(தாக்காத) மக்கள் வாழுகிற சேரி என பொருள் கொள்வோரும் உண்டு.
சோழர்கள் ஒவ்வொரு குடிகளையும் தனித்தனியாக சேரி களாக அமர்த்தினார்கள் என்பது இந்த கல்வெட்டு மூலம் நமக்கு தெரிகிறது.
-தினேஷ்