நன்னிலம் வட்டம் கல்வெட்டுகள்
திருவாரூர் மாவட்டம் எண்கண் ஊரிலுள்ள பிரம்மபுரீசுவரர் கோவிலின் மேற்கு குமுத பட்டையில் வலதுபுறம் ஒரு கல்வெட்டுள்ளது அஃது
"ஸ்வஸ்திஸ்ரீ பெரியதேவர்
கரிகாலசோழதேவர்க்கு யாண்டு யக
ப்ரஸாதஞ் செதருளின திருமுகப்படி
த்ரிபுவநச் சக்ரவத்திகள் கோனேரிமேல்
கொண்டான் குலோத்துங்க
சோழவளனாட்டு இங்கணாடு
இங்கணான் பவித்திரமாணிக்க
சதுபேதிமங்கலத்து ஸபையாற்க்கு
தங்களூரில் காணியாளர் இன்றியும் ......"
மூன்றாம் குலோத்துங்க சோழருக்கு விஜயாலய சோழர், கரிகால சோழர் என்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
இக்கல்வெட்டில் பெரியதேவர் கரிகாலசோழ தேவர் என்றிருப்பதால் இக்கல்வெட்டு மூன்றாங் குலோத்துங்க சோழராக இருக்கலாம். இவரது 11 ஆவது ஆட்சியாண்டில் பெரியதேவர் கரிகாலசோழதேவர் சொன்ன ஆணைப்படி குலோத்துங்க சோழவளநாட்டு இங்கணாடு இங்கணான் பவித்திரமாணிக்க சதுர்வேதிமங்கலத்து சபையார் தங்களூரில் காணியாளர்கள் இல்லாததால் விவசாயம் செய்யமுடியாமல் போக நிலத்தை விற்றதாக தெரிகிறது. கல்வெட்டு முழுமையாக இல்லாததால் முழுத்தகவல் அறிய முடியவில்லை.
தகவல் : நன்னிலம் வட்டம் கல்வெட்டுகள்
தொ - 1.