முதலாம் இராசேந்திரர் வடதிசை மன்னர்களை வென்றதையும் கங்கையைக் கொணர்ந்ததையும் குறிப்பிடுகிற கல்வெட்டு!
கங்கைகொண்டான்
எண்ணாயிரம் பெருமாள் கோயிலின் அடிதளத்தில் வடமேற்கு மூலையில் முதலாம் இராசேந்திரர் கல்வெட்டொன்றுள்ளது. அதில் வடதிசை மன்னர்களை வென்றதையும் கங்கையைக் கொணர்ந்ததையும் குறிப்பிடுகிறது.
அதாவது ராஜேந்திரசோழதேவர் வடபுலத்து
(உத்தராபதம்) மன்னர்களையெல்லாம் வென்று யுத்தோத்சவ(யுத்த விழா) விபவம்(பெருமையினால்) கங்கையைத் தனதாக்கி கங்கைகொண்ட சோழன் என்ற திருநாமம் பெற்றதனால்,
எண்ணாயிரம் கோயிலில் கங்கைகொண்ட சோழன் என்னும் திருமுற்றத்தில் (சுவாமி சன்னதியில்) வேதம் வல்ல பிராமண பிரம்மச்சாரிகள் சிறந்த உணவு(உத்தமாக்ரம்) உண்ண நிவந்தம் அளிக்கப்பட்டது..
தகவல் : Pon Karthikeyan
எண்ணாயிரம்