குளப்பாக்கம் நிலஅளவுகோல் !
குளப்பாக்கம் நிலஅளவுகோல்
சென்னைப் போரூர் அருகேயிருக்கக் கொளப்பாக்கம் அகத்தீசுவரர் கோயிலின் கிழக்குப் புறம் நந்திக்கு எதிரேயிருக்கும் குமுதப்பட்டியில் சுந்தர பாண்டியரின் கல்வெட்டுள்ளது. அதில் ஒரு நில அளவுகோள் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஸ்வஸ்திஸ்ரீ எம்மண்டலமும் கொண்ட சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு யகூ திருவாய்மலர்ந்தருள ...... மத்த நாராயணன் இட்ட நில அளவுகோல்"
இக்கல்வெட்டுக்கு அருகே ஒரு அளவுகோல் வரைந்து அதன் இரு பக்கமும் இரு மீன் உருவங்கள் கோட்டுருவில் வரையப்பட்டிருக்கிறது. இது நிலத்தை அளக்கப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதன் நீளம் 11 3/4 அடி. ( ஆவணம் 18, 2007)
ஆனால், தற்போது இந்த அளவுகோல் கிழக்குக் குமுதப்பட்டையில் இல்லை. வடக்குக் குமுதப்பட்டையில் உள்ளது. அதன் நீளத்தை சாண் அளவால் அளந்துப் பார்த்ததில் 17 சாண் நீளமிருந்தது.
12 விரல் = 1 சாண்
16 சாண் = 1 கோல்
இந்தக் கோயிலில் உள்ள அளவுகோல் 11 3/4 அடி (அ) 141" இன்ச் (அ) 3.60 மீ. (பொது அளவு)
இந்தக் கோலின் தமிழளவு 17 சாண் (அ) 204 விரல்கள். படங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.
ஆவணத் தகவல் : Pon Karthikeyan