தென்காசிப் பாண்டியர் கல்வெட்டு.

தென்காசிப் பாண்டியர் கல்வெட்டு. 
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
தென்காசி தாலுகா, அனந்தபுரம் ஊருக்கு மேற்காக, செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்திற்கு வடக்கிலுள்ள பொத்தையில், கீழிருந்து மேல் நோக்கி நீள்வாக்காக பொறிக்கப்பட்ட கல்வெட்டு . 

அரசர் : ஸ்ரீ குலசேகரத்தேவர்.

காலம் :14-15ம் நூற்றாண்டு.

செய்தி : பிற்காலப் பாண்டியனான, தென்காசிப் பாண்டியர் மரபில் வந்த குலசேகரத்தேவரின் காலத்தில்,  திருககுற்றாலத்து மகா சபையார்கள், வைகுந்த வளநாட்டின் பெரும் பழஞ்சிக்குடி நாயன் கருமாணிக்காழ்வார் மூலமாக, திருக்குற்றாலம் கோயிலின் திருக்காமக்கோட்டத்து பெரிய நாச்சியாருக்கு  {குழல்வாய்மொழி அம்மன்}  தேவதானமாக ,புலியூரில் நஞ்சை புஞ்சை நிலங்கள் அதற்கு கடமை முதலான எப்பேர்ப்பட்ட வரிகளையும் நீக்கி வழங்கியுள்ளார்கள். 

சாசனம்.

1.ஸ்வஸ்திஸ்ரீ கோ மாற பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலசேகரத்தேவருக்கு யாண்டு நாலுவது (ஆண்டு) மாசி மாதம் நாள்

2. திருக்குற்றாலத்து மாசபையோம் வய்குந்த வளநாட்டுப் பெரும் பழஞ்சிக்குடி நாயன் கருமாணிக்காழ்வார் உடையார் திருக்குற்றாலம் உடைய நாயினார் 

3.கோயில் திருக்காமக்கோட்டத்துப் பெரிய நாச்சியாருக்கு தேவதானமாக புலியூர் பாக்கல் கொண்டிட்ட நாட்
டின இகல்வா. மன நாட்டின 

4. திருச்சூலக்கல்லுக் குட்பட்ட நன்செய்க்கும் புன்செய்க்கும் மற்றும் எப்பேற்ப்பட்ட கடமை வரிக்கும் பிரமாணமாக 

5.ஆண்டு ஒன்றுக்கு. . .குக் கடமை ஆகக் கொள்ளக் கடவதான. .க்கு இப் பணம் பதினே(ழு)க்கும் . ஆண்டு தோறும் கொள்ளக் கடவதான. . . .

{ முற்றுப்பெறவில்லை}

நன்றி! 
அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்