தமிழகத்தின் தொன்மையான நடுகல் தேனியில் :- (2400 ஆண்டுகள் பழமையானது)

தமிழகத்தின் தொன்மையான நடுகல் தேனியில் :-
(2400 ஆண்டுகள் பழமையானது)

மதுரைக் கணக்காயனார்  
அகநானூறு 342
குறிஞ்சி பாடலில்

" ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலைபுணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியான்கிளைஞன் அல்லனோ நெஞ்சே தெனாஅதுவெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை மண்கொள் புற்றத் தருப்புழை திறப்பின்ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்ஏவல் இளையர் தலைவன் மேவார்அருங்குறும் பெறிந்த ஆற்றலொடு பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைகெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅநீரிழி மருங்கிற் கல்லளைக் கரந்தவவ்வரையர மகளிரின் அரியள்அவ்வரி அல்குல் அணையாக் காலே" எனப் பாடியுள்ளார்.

இதன் விளக்கம் :
கவுரியர் ( பாண்டியர்)நன்னாட்டில் உள்ள  மண்ணாலாய புற்றினையுடைய, காட்டரணின் இடத்தைத் திறத்தலோடு, பகைவர் ஆக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரினராய கள்வர்கட்கு முதல்வனும், ஏவுதலைச் செய்யும் வீரர்கட்குத் தலைவனும், பகைவரது அரிய அரண்களை அழித்த வலிமையுடன், பருந்துகள் வந்துகூடப் பகைவரது பலபோரையும் வென்ற, இடியுடன் மாறுபடும் பெரிய கையினையும்,என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையுமுடையானும் ஆகிய, பாண்டிய மன்னன்! 

பாண்டிய நாட்டில் உள்ள பழைய ஊரினராகிய பகைவரின் பசுக்கூட்டங்களை கவர்ந்து வரும் வெட்சிப்போர் புரியும் கள்வர் பெருமக்களின் தலைவன் பாண்டிய மன்னன் என பாண்டியத்தேவர் போற்றப்படுகிறார்.......

இந்தப் பாடல் எழுதப்பட்ட அதே காலகடத்தை சேர்ந்த தமிழகத்தின் பழமையான ஆகொள் நடுகல் கல்வெட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் உள்ள புலிமான் கோம்பை எனும் ஊரில்  கிடைத்துள்ளது.

கிட்டதட்ட 2400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பிராமி எழுத்துக்களால் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.இந்த நடுகல் சுமார் 3 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்டுள்ளது. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட ஈம சின்னத்தின் ஒரு பகுதியாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகளிலேயே இந்த கல்வெட்டு தான் பழமையானது என தொல்லியல் துறை கணக்கிட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட அகநானூறு பாடல்களில் மதுரையில் ஆகொள் பூசலில் கள்வர்கள் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டோம். 

தமிழகத்தின் மிக பழமையான ஜல்லிக்கட்டு தொடர்பான குகை ஒவியங்கள் உசிலம்பட்டி வட்டத்தில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்வெட்டு நடப்பட்டு இருக்கும் பகுதியில் அதிமான முதுமக்கள் தாழிகள் கிடைத்து உள்ளது.

 இவற்றை நோக்கும் போது இப்பகுதியில்    பழங்காலம் முதலே மக்கள் வசித்து வருவதும், ஆநிரை கவர்தல், ஜல்லிக்கட்டு ஆகிய நிகழ்வுகள் ஆதிகாலம் தொட்டே இப்பகுதியில் நடந்து வருவதை அறியலாம். 

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார் 

( கல்வெட்டு நகல் :- நடுகல் கல்வெட்டுகள் : ர பூங்குன்றன்)