முகப்பு வரலாறு தொல்லியலும் வரலாறும் கோயில்கலை,சிற்பங்கள் ,ஓவியங்கள், படிமங்கள், பிற கலைகள் கொற்றவை போன்று ஒரு கொடூரமான சிற்பம்..! பார்க்கவே பயம் வருவது உறுதி..
கொற்றவை வழிபாடு தமிழர்களின் பண்பாட்டில் முக்கியமானதாக முந்தைய காலத்தில் இருந்தாலும் அவை இன்று வேறு வடிவத்தில் காளி வழிபாடாகவும், பெண் தெய்வ வழிபாடாகவும் மாறிவிட்டது. மேலும் இந்தியா முழுக்க கொற்றவை வழிபாடு இருந்ததற்கான சான்றுகள் இன்றளவும் உள்ளன.
மூவேந்தர்களின் வழிபாடுகளில் , கோவில்களில் கொற்றவை வழிபாடு அவசியம் இடம்பெறும் என்பது குறிப்பிட தக்கது .
தெலுங்கானாவில் கொற்றவை :
சாளுக்கியர்கள் 7ம் நூற் றாண்டில் தெலுங்கானா பகுதியில் கட்டிய கோவில் ஒன்றில் மிகவும் பயங்கரமான கொற்றவை போன்ற ஒரு சிலை காணப்படுகிறது.
விரிந்த சடைகள்,தெறித்து விழுவதை போன்று விரிந்த கண்கள், கோரைப்பற்களுடன் விரிந்த வாயில் வெளி வந்து தொங்கும் நாக்கு, வற்றி சரிந்து தொங்கும் முலைகள், துருத்தி தெரியும் நெஞ்செலும்புகள், உடலின் குறுக்காக மண்டையோட்டு மாலை, வலது முன் கையில் கத்தி, இடது முன் கையில் கிண்ணம், வலது பின்கையில் வெட்டிய தலை, இடது பின் கையிலும் ஆயுதம், சவத்தின் மீது அமர்வு என பார்க்கும் போதே நடுக்கம் கொள்ளும் வகையில் சிற்பம் உள்ளது.
ஏழாம் நூற்றாண்டு – சாளுக்கியர் கலை -தெலுங்கானா