இடாகினிப்பேய்!
இடாகினிப்பேய்:
சிலம்பில் மாலதி எனும் பெண் தனது கணவனின் முதல் மனைவியின் குழந்தை அழுததைக் கண்டு தூக்கி எடுத்து பால் ஊட்டுவாள். அந்தக் குழந்தை அதீத பால்குடித்து மூச்சுத் திணறி இறந்துவிடும். குழந்தையை பெற்றெடுத்த அவளது சக்கலத்தி இவளை ஏசிவாடுவாள்.
‘‘என் பிள்ளையை உயிருடன் கொண்டு வந்து தா’’ என் அவள் கூற, மாலதி அக்குழந்தையுடன் சுடுகாட்டுக்கு செல்வாள். அங்கு இடாகினிப் பேய் வந்து அவளிடமிருந்து குழந்தையைப் பறித்துக் கொண்டு போய்விடும். அப்போது பாசண்டச் சாத்தான் எனும் தெய்வம் இடாகினியிடமிருந்து குழந்தையைப் பறித்து அதற்கு உயிருண்டாக்கிக் கொடுத்ததாய் சிலம்பு கூறுகிறது.
மேலும் ,காந்த்திறம் உரைத்த காதையில் இடாகினிப் பேய்
"சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளில் சென்றாங்கு
இடுபிணந் தின்னும் இடாகினிப் பேய்வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை’’
என்ற வரிகளில் இடாகினி என்பவள் ஒரு பிணம் தின்னிப் பேய் என்பது தெளிவாகிறது.
சிலம்பு கூறும், பாசாண்ட சாத்தன் இன்று அய்யனாராகவும், கொற்றவை துர்க்கையாகவும் மாறியிருக்க வாய்ப்பு அதிகம். சிலம்பு குறிப்பிடும் அத்தனை விஷயங்களும் தொண்டைநாடு மற்றும், நடுநாட்டில் அப்படியே பிரதிபலிக்கிறது. ஜவ்வாது மலைப்பகுதியில் சிலப்பதிகார வழக்காற்றுபடியே இன்னும் கொற்றவையை "சூலி" என்றழைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இடாகினிப்பேயின் இந்த சிற்பம் விழுப்புரம் அருகே இன்றும் வழிபாட்டில் உள்ளது.
நன்றி:
திருச்சி பார்த்தி ,பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜா