மூன்று தலையும் ஒரே உடலும் கொண்ட நந்தி - அபூர்வமான சிற்பம்..!

நந்தி என்றாலே அது சைவ சமயத்தில் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. நந்தி என்கிற காளை ஆனது சிவபெருமானின் வாகனமாக புராணங்கள் தெறிவிக்கிறது. பொதுவாக இந்து சமய கோவில்களில் 5 வகையான வெவ்வேறு விதமான நந்திகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் ஒரே ஒரு கோவில் மட்டும் 3தலைகளும் ஒரே உடலும் கொண்ட நந்தியானது வணங்கப்பட்டு வருகிறது. இவை கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற ஊரில் உள்ள புகழ்பெற்ற கோவிலாக கருதப்படும் விருபாட்சர் கோவிலில் உள்ளது.

உலகில் வேறு எங்கும் இது போன்ற நந்தி கிடையாது. இக்கோவிலில் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது. அதனை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கலாம். நந்தியின் மூன்று தலை பகுதிகள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைப்பகுதி மட்டும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

 

இந்த கோவில் கோபுரம்  கர்நாடக மாநிலத்தில் மிக உயரமான கோபுரம்மாகும் .  இவை  கர்நாடக மக்களின் கலாச்சாரத்தின் பிரதிபலளிப்பாகவே கருதபடுகிறது . 

கோவிலின் நிழல் தலை கீழ் உருவமாக (நிழல் அல்ல) தெரிவது மிக சிறப்பு.