திருச்செந்தூர் கோயில் - வள்ளி அம்மன் குகைக் கல்வெட்டு
திருச்செந்தூர் கோயில் - வள்ளி அம்மன் குகைக் கல்வெட்டு
1] முருகன் அருளால் நட 2] ந்து வருகின்றன கந்
3] த கடவுளாருக்கு வல் 4] லியை மணம் செய்ய வே 5] னுமென்று சம்புவை 6] ஆறாதித்தனள் உடனே லிங் 7] சுரூபிலாயினர் லிங் 8] க விழவின்றாகிய சிவபெரு 9] மான் சதாதேவனாய்ப் 10] பூஜை செய்யும் இடத்துக் 11] குவல்லி ஒளிக்கும் மவ 12] ள் நாடென பெயர் தங்கிய 13] இந்த தலஸ்தலத்தில் ஸ்தல புறா 14] ணத்தில் இருக்கின்றன [இ 15] தை]1580 [வருசத்தி]ல் திருச் 16] செந்தூரில் றாஜர் கல் 17] பிச்ச கட்டளை ஏற்படுத் 18] திய சமையம் முத்த 19] ய அவதானியை கல் 20] பிச்சுப் பாத நமஸ்காரம் 21] செய்ய ஏற்படுத்தினர் 22] அவரால் பிறிதிக்கு கொ 23] ண்டு வந்த இதை [மேற்படி]வ 24] வகையாறாக்கள் முத்தைய்ய 25] ஜோஸியன் கந்த 26] ப்பிறவு உத்தரவினை 27] படி யிந்தபடிக்கி 28] கிணறு சகல மண்ட 29] பம் யிவை தயாநி 30] தி முருகன் அருளா 31] நித்திய பூஜை 32] யும டைந்து வருகி 33] றது உ வைகாசி 34] ………..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோயிலில் உள்ள வள்ளி அம்மன் குடைவறை தாழ்வறையாகும் மணலாலும் பவளப்பாறையினாலும் பல்லாயிரமாண்டுகளுக்கு முற்பட்டது . முருகனை திருமணம் செய்ய சிவலிங்கத்தை வள்ளிஅம்மன் வழிபட்ட இடமாகக் கருதப்படுகிறது.
கி.பி.1648 ஆம் ஆண்டில் திருமலைநாயக்கர் காலத்தில் டச்சுகாரர்கள் திருச்செந்தூரைக் கொள்ளையிட்டனர். அவரது முகவராக வடமலையப்பிள்ளை இருந்தார். டச்சுகாரர்கள் கோயில் சிலைகள், நகைகளைக் கொள்ளையிட்டனர். இந்த நிகழ்வுக்குப் பின்பு கி.பி.1656 இல் ராஜாவின் அனுமதி பெற்று இந்த இடத்தில் சகம் 1580[கிபி1656] இல் கிணறு, மண்டபத்தை ஏற்படுத்தினார். தினமும் வழிபாடு செய்து வர முத்தையஜோசியன் என்பவர் கட்டளையை உருவாக்கிய செய்தி காணப்படுகிறது.
நன்றி : தவசிமுத்து மாறன்
நன்றி
:தமிகத் தொல்லியல் கழகம்.
ஆவணம்-22 /2011