இராமாயண காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பாண்டியனது இருப்பு
தமிழன் பழமை..
ஸ்ரீராமனது காலத்திற்கு வெகு முந்திய காலத்திலேயே தமிழனின் இருப்புக் குறித்து ஏராளமான சான்றுகள் உண்டு..
புராண இதிகாசநிகழ்வுகளைக் கொண்டு தமிழனின் பழமையையும் பெருமையையும் தெளிவாக உணரலாம்..
இராமாயணம். கிஷ்கிந்தா காண்டம் .
4 / 41 / 18.. ஸ்லோகம்.
சீதையைத் தேடிச்செல்லும் வானரர்களிடம்
சுக்ரீவன் இவ்வாறு கூறுகிறார்.
"தடோ ஹேமாயம் திவ்யம் முக்த மனி விபுசிடம் யுக்தம் கவாடம் பாண்டியானாம் கடா த்ரக்சுயத வானராம்.."
நீங்கள் தென்திசை நோக்கிச்செல்லும் வழியில் , தங்கம் முத்து ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட பேரரசன் பாண்டியனின் கபாடபுரத்தை காண்பீர்கள்..
ஆக..
இராமாயண காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பாண்டியனது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.
அதாவது ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு முந்தைய குடி தமிழன். அப்பவே ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மதில்சுவரையுடைய அரண்மனையில் வாசம் செய்த சங்கத்தமிழன் பாண்டிய அரசன் ..
இதை இராமயணமே உறுதி செய்கிறது.
ஸ்ரீராமரை சூரிய குலம் என்று போற்றுகிறோம்.
இந்த சூரியகுலம் என்பதை எங்கேயிருந்து எடுத்தார்கள். சோழர்களிடமிருந்து எடுத்தார்கள்.
எப்படி என்றால்..
பாண்டியர்களின் வம்சாவழி பற்றிய தரவுகள் திருவிளையாடல் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை ஆகியவற்றில் கிடைக்கிறது.
சிவபெருமானின் 64 திருவிளையாடல் புராணங்களை பரஞ்சோதி முனிவர் தொகுத்தார். இந்நூலில் பாண்டியர்களது வம்சாவழியைக் கூறுகிறார்.
படலம் 3 ல் குலசேகரபாண்டியன், படலம் 4 ல் மலையத்துவன் என்று தொடர்ந்து பட்டியல் வருகிறது. இந்த மலையத்துவ பாண்டியனின் மகள்தான் அன்னை மீனாட்சி. சிவனையே மணம் செய்தவர்.
பட்டியல் தொடர்கிறது.
1) சித்திரரதன்
2) சித்திரபூடணன்
3) சித்திரத்துவசன்
4) சித்திரவருமன்
5) சித்திரசேனன்
6) சித்திரவிக்கிரமன்
7) இராசமார்த்தாண்டன்
8) இராச சூடாமணி
9) இராச சார்த்தூலன்
10) துவிசராச குலோத்தமன்
11) ஆயோதனப் பிரவீணன்
12) இராச குஞ்சரன்
13) பரவிராச பயங்கரன்
14) உக்கிரசேனன்
15) சத்ருஞ்சயன் வீமரதன்
16) வீம பராக்கிரமன்
17) பிரதாப மார்த்தாண்டன்
18) விக்கிரம கஞ்சனன்
19) சமர கோலாகலன்
(20, 21…..??)
22) அதுல கீர்த்தி
கீர்த்திவீடணன்:
இந்த அதுல கீர்த்திவிடணன் காலத்தில்தான் கடல் பொங்கி பாண்டியர் தலைநகரத்தை அழிக்கிறது..
அதன்பிறகு..
சந்திர குலத்தில் பாண்டியனும், சூரியகுலத்தில் சோழனும், அக்னி குலத்தில் சேரனும் தோன்றுகிறார்கள்..
இக்காலத்திற்கு பிறகுதான் இராமாயனம்.. அப்போதுதான் ஸ்ரீராமன் தன்னை சூரியகுலம் என்கிறார்.
அதாவது சங்கத்தமிழன் சோழரின் சூரியகுல பட்டத்தைத்தான் இராமன் சூடுகிறார்.
அதாவது ஸ்ரீராமருக்கும் மூத்தகுடி சோழர்குடி..
ஆக...
புராண இதிகாச நிகழ்வுகளுக்கெல்லாம் முன் தோன்றிய மூத்தக்குடிதான் தமிழ்க் குடி என்பதை சான்றுகளுடன் அடுக்கிக் கொண்டே போகலாம்..
அன்புடன்
மா.மாரிராஜன்.