சோழர்கள் தங்கள் பெயரில் உருவாக்கிய ஆறுகளும் வாய்க்கால்களும் - அரிய தகவல்..

சோழர்கள் தங்கள் பெயரில் உருவாக்கிய ஆறுகளும் வாய்க்கால்களும் - அரிய தகவல்..!


"உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” என்றான் புறநானூற்றுப் புலவன். தஞ்சை மாவட்டம் நெற்களஞ்சியமாக விளங்குவதற்கு அன்று சோழப் பெருமன்னர்கள் நீர் பாசனத்துக்கு செய்த அருந்தொண்டே காரணம். எவ்வளவு கால்வாய்களையும் வாய்க்கால்களையும் வெட்டி அவர்கள் வளம் பெருக்கியுள்ளார்கள் என்பதற்கு கல்வெட்டுகள் அடிப்படையில் பல சான்றுகள் உள்ளன. இதோ இந்தப் பெயர்களைப் பாருங்கள்.


1) செம்பியன் மாதேவிப் பேராறு 


2) முடிகொண்ட சோழப் பேராறு 


3) வீரராஜேந்திர சோழப் பேராறு 


4) புத்தாறான குலோத்துங்க சோழப் பேராறு 
(புதிதாக பெருங்கால்வாய் வெட்டி, சோழன் தன் பெயரிட்டான் என்பதை இது தெரிவிக்கிறது) 


5) பாண்டி குலபதிப் பேராறு 


இவையெல்லாம் பெருங்கால்வாய்களாகப் புதிதாக வெட்டப்பட்டவை. 


1) இராஜராஜன் வாய்க்கால் 


2) சனனாதன் வாய்க்கால் 
(இராஜராஜனின் மற்றொரு பெயர்)


3) இராஜேந்திரசோழன் வாய்க்கால் 


4) கங்கைகொண்ட சோழன் வாய்க்கால் 


5) இராஜகம்பீரன் வாய்க்கால் 


6) விக்கிரம சோழ வாய்க்கால் 


7) தான துங்க வாய்க்கால்


8) அம்மை அப்பன் வாய்க்கால்


9) திருவாஞ்சியதேவன் வாய்க்கால்


10) சோமநாததேவன் வாய்க்கால் 


11)முன்னூற்றுவன் வாய்க்கால் 


12)மூவாயிரவன் வாய்க்கால் 


13)கூற்றங்குடி வாய்க்கால்


14) பாம்பூர் வாய்க்கால் 


15)தளி வாய்க்கால் 


16)உட்சிறு வாய்க்கால்


 நன்னிலம் வட்டத்தில் ஒரு பகுதியிலுள்ள கல்வெட்டுக்களே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வொரு பகுதியிலேயே இவ்வளவு பேராறுகளும் வாய்க்கால்களும் உள்ளன எனில் எவ்வளவு நீர்வளம் செழிக்கச் சோழர் அடிகோலினர் என ஊகிக்கலாம். 


இப்பகுதியில் கீழ்வரும் நான்கு வள நாடுகள் குறிக்கப்படுகின்றன. 


1) அருமொழி தேவ வளநாடு 


2) உய்யக்கொண்டார் வளநாடு 


3) குலோத்துங்க சோழ வளநாடு 


4) கேய மாணிக்க வளநாடு இவற்றில் பெரும் பகுதி குலோத்துங்க சோழ வள நாட்டிற்குள் இருந்தன. 


இதன் கீழ் அம்பர் நாடு, பனையூர் நாடு, திருமருகல் நாடு, இங்க நாடு, ஆகியவை இருந்தன. அடுத்து உய்யக்கொண்டார் வள நாட்டின் கீழ் அம்பர் நாடும், பாம்பூர் நாடும் இருந்தன. அருமொழி தேவ வள நாட்டின் கீழ் மங்கல நாடு திகழ்ந்தது. கேய மாணிக்க வள நாட்டில் மருகல் நாடு இருந்தது.