நாகை ஆளுநர் மனைவியின் கல்லறை !
நாகை ஆளுநர் மனைவியின் கல்லறை !
கி.பி.1658 ல் டச்சுக்காரர்கள் நாகபட்டினத்தை தங்கள் கட்டுக்குள் போர்ச்சுகீசியர்களிடமிருந்து கொண்டுவந்தார்கள் . இதற்கான ஒப்பந்தம் 15-01-1662 அன்று , தஞ்சாவூரில் இருக்கும் ராஜா விஜய நாயக்கர் அவர்களுக்கும் , டச்சுக்காரர்களுக்கும் இடையில் போடப்பட்டது. நாகையில் 18 ஆம் நூற்றாண்டில் ஆளுநராக இருந்தவர் #Jacob_Mossel. இவர் 14 (அ) 15 வயதான #Adriana_Appels என்றப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு #Katrina_Johanna என்ற 5 வயது மகள் இருந்தார். அவர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுக் காலமாகிவட்டார். தனது மகள் இறந்த சோகத்தில் தாயாரான Adriana வும் 1743 ல் 28 ஆவது வயதில் காலமானார். St. Peter church ல் கிடைக்கும் ஒரு டச்சு ஆய்வாளரின் ஒரு சிறு அறிக்கையில்
"நாகப்பட்டினத்தின் அனைத்து மணிகளும் நாள் முழுவதும் சுருண்டன, டச்சு கப்பலில் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் துப்பாக்கி வான் நோக்கிச் சுட்டன,” மற்றும் "வானம் அட்ரியானாவின் இறுதிச் சடங்கைக் குறிக்க, நாகப்பட்டினத்திற்கு மேலே துப்பாக்கியின் வாசனையுடன் கனமாக இருந்திருக்க வேண்டும்".
என்று எழுதப்பட்டுள்ளது. Adriana வின் கல்லறை நாகை இரயில் நிலையம் அருகே உள்ள டச்சுக்காரர்களின் கல்லறைகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. நாகை ஆளுநரின் மனைவியின் கல்லறை இன்று சேதமடைந்துக் காணப்படுகிறது.
தகவல்: (The Hindu - A Tale of a Royal Tombstone. P.V. Srividya)
ஆளுநரின் படம் : கூகுள்.