விவசாயத்திற்காக உயிரை விட்ட பள்ளர்
பாண்டியர் காலத்தில் விவசாயத்தி
ற்காக உயிரை விட்ட பள்ளர் - கல்வெட்டு ஆதாரம் உள்ளே..!
வீரங்காட்டி வீழ்ந்த பேருக்கு வீர வாழ்த்துப் பாடுவதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களை நம்பி இருந்தவர்களின் வாழ்க்கைப் பொறுப்பினையும் தமதாகத் தமிழ்ச் சமுதாயம் எடுத்துக் கொண்டது பற்றி ஒரு நடுகல் விளங்குகிறது .
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுடி ஒரு சிற்றூர் . அதன் அருகில் கருங்குளம் என்ற பெரிய ஏரி ஒன்று இருந்தது . இன்றும் இருக்கிறது . பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒருநாள் அதன் கரையில் ஒரு உடைப்பு நேர்ந்து விட்டது . அந்தக் குளத்தின் நீராளியாக இருந்த பள்ளன் ஒருவன் தக்க சமயத்தில் , அதைக் கண்டுபிடித்து விட்டான் , கடமை பிடர் பிடித்து உந்தவே தனி ஒருவனாக இருந்து , அந்த உடைப்பை அடைப்பதில் வெற்றி கண்டான் . ஆனால் அந்த பெரு முயற்சியில் அவன் உயிரிழந்தான் . அவனுக்கு ஓர் இளம் பெண் இருந்தாள் . அவளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பினை , அந்த ஊர் மக்கள் ஏற்றுக் கொண்டனர் . தக்க வேளையில் ஏரிக்கரையைச் செப்பனிட்டு அந்த ஆண்டு விளைச்சல் பாதிக்காமல் ஊராருக்கு உணவளிக்கும் வகையில் ஏரியைக் காத்த அவன் வீரத்தைப் பாராட்டி . அவன் மகளின் வாழ்க்கைச் செலவுக்காக அவ்வூரில் அரை மா நிலம் ஒதுக்கி வைத்ததோடன்றி அவன் நினைவாக ஒரு கல் நட்டு , அதில் இந்தச் செய்தியையும் பொறித்து வைத் துள்ளனர் அவ்வூரார் .
ஊருக்கு உழைக்கும் பணியில் உயிரிழக்கும் தொண்டர்களின் கடமையை ஊராரே ஏற்று நடத்தும் சமுதாய அமைப்பு இருந்ததை இந்நினைவுக் கல்லால் அறிகிறோம்.
அதன் வாசகம் வருமாறு :
"குலசேகர தேவர்க்கு யாண்ட 34வ துக் கருங்குளத்திர்க் கு ஒரு பழி உண் டான படியாலே இப்பழிக்கு இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன் அணை வெட்டிப் போகையா லே இவன் மகளுக்கு ஊரார்களிட்ட உதி ரப்பட்டி குடுத்தபடி தபான வ நிலம் அரை மா அணை நிலம் . ."