வன்னியர்_பட்டமா ? சாதியா? ஒரு பார்வை
வன்னியர்_பட்டமா ?
சாதியா? ஒரு பார்வை :
வன்னியர் என்ற பெயரின் விளக்கத்தில்
வன்னி =கிளி,தீ, குதிரை, மர வகை, தலைவன், சிங்கம்
என்று பல பொருள் தருகிறது. வன்னியன் என்னும் சொல்லின் பொருள் வன்மை என்ற வேர் சொல்லின் பொருளுடையது என்பதே உண்மை.திண்ணிமையான நெஞ்சம் உள்ளவன் திண்ணியன். வன்மையுடைய நெஞ்சம்
உள்ளவன் வன்னியன். வன்னியர் என்பது ஜாதி பெயரல்ல என்று தெளிவாக தெரிகிறது பட்டமே என்று.
வன்னியர் என்ற பட்டம் எந்த எந்த ஜாதியினர்க்கு
உள்ளது என்று பார்போம்.
1.ஈசனாட்டு கள்ளர் (மத்திய அமைச்சர் பழனி
மாணிக்கம் வன்னியர்)
2.வலைய முத்தரையர்(வழுவாடி வன்னியர்)
3.வன்னிக்கொத்து மறவர்(வன்னியர்,வன்னியடி
மறவர்)
4.ஆர்க்காடு அகமுடையர் (வன்னிய முதலியார்)
5.துளுவ, கொங்கு வெள்ளாளர்(வன்னியர் கவுண்டர்)
6.பார்க்கவ குலத்தார் (வன்னிய மூப்பனார்)
7.பரவர்,கரையர்(வன்னியர்)
என பல்வேறு சமூகத்தினருக்கு இருக்கிறது.
இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும், அகம்படிய, மறவர்களுக்கும்
வழங்கப்பட்டது உண்டு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப் பகுதியில் முத்தரையர் சமூகத்தவர்கள் சின்ன வன்னியனார்
என்றும், வழுவாடித் தேவர் என்றும் பட்டம் புனைந்திருந்தனர்
தேவகோட்டை அருகிலுள்ள
சூரைக்குடியில் மறவர் குலத்தைச் சேர்ந்த விசயாலத்தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம்உண்டு . கொல்லம்கொண்டான், கங்கைகொண்டான் மற்றும் சேத்தூர் முதலிய மூன்று பாளையங்களும்
வணங்காமுடி பண்டார மறவர். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னியர் பட்டம் கொண்டவன்னிக்கொத்து மறவர்கள் இவர்கள் வன்னியர்(பள்ளி) அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார். [TIRUNELVELI GAZETTIE
H.R PATE AND NELSON].
(கி.பி. 18ஆம் நூற்றாண்டைய சிறிய கிருஷ்ணாபுரம்
செப்பேடு.) மலையமான் திருமுடிக்காரியின் நேரடி மரபு
வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மற்றும் வன்னியபட்டம் (பார்கவ கோத்திரம்) உள்ள சிலரும் தஞ்சைக் கள்ளர்களும் மட்டுமே.பார்கவ
குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார். சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற
இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி.பார்கவ
குலத்தோர் பாரி, மலையமானின் வாரிசுகளாக உறுதிப்படுத்துகிறது. இவர்களுக்கு வன்னிய பட்டம்
உண்டு .
1891க்கு பிறகு சென்னை கோர்டில் பள்ளி இனத்தோர் ஒரு வழக்கு தொடுத்தனர். அதில் பள்ளி என்ற பெயரை வன்னியர் (அ) வன்னியர் குல சத்திரியர் என மாற்ற
கோரிக்கை வைத்தனர். அதில்
after Mr. T. Varadappa Nayakar, the only High Court Vakil
(pleader) among the Palli community practising in Madras,
brought out a Tamil book on the history of the their connection
of the caste with the ancient Pallava kings for Chidambaram
temple, by name Sweta Varman, subsequently known as
Hiranya Varman (sixth century A.D.) was a Pallava king. At
Pichavaram, four miles east of Chidambaram, lives a Palli
family,they say, ruled over Mylapore during the time of the visit
of St. Thomas. (PALLI OR VANNIYAN by caste and tribes of
south india by edgar Thurston)
அப்போது வன்னியர் என்று தற்காலத்தில் உள்ள சாதியர் யார்? இதற்கு ஆதாரப்பூர்வமாக மிரஸ் ரேட் கல்வெட்டு தொண்டை மண்டலத்தின் குடிமக்களை கூறும் செய்தி:
"தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள்சுருதிநாள்
முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன், வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைக்காரர் கலைமீது சரடோட்டும்பாணன்,
தலைக்கடைக் காவல்புரி
பள்ளி,வலையன், பண்டு முதல் ஊரான் மறிக்கும்
இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண்
குடிமக்க ள் அனைவரும்...................
இதில் இன்று தொண்டை - மண்டலதில்
பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் என்ற ஜாதி பற்றி குறிப்பிடவில்லை. (இக்குடிகளே பெரும்பாலும் வன்னியப் பட்டம் கொண்டோர்.) இவர்களை இங்கு பள்ளி என்ற ஜாதியாகத்தான் குறிப்பிடுகின்றர். இப்பள்ளி என்ற இவ்வினமே பிற்காலத்தில் வன்னியர் என்று 1891 தமிழ்நாடில் கெஜட்டில் மாற்றம் செய்து
கொண்டார்கள்.
தொடர்வோம்...