அமெரிக்க பழங்குடிகளின் பண்பாடு - சுருக்கமான வரலாறு..!
எஸ்கிமோக்கள், மங்கோலியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குள்ளமாகவும், கட்டான உடலும், பழுப்பு நிறமும், பாட்டைத் தலையும், சாய்ந்த கண்களும் கொண்டவர்கள். இவர்களின் எண்ணிக்கை சுமார் 33000 ஆகும். ஆர்ட்டிக் பிரதேசமாகிய கிரீன்லாந்திலும், வட அமெரிக்காவிலும், பேரிங் கடலின் ஆசிய கடற்கரைப் பகுதிகளிலும் இவர்கள் வசித்து வருகிறார்கள். மிகவும் வசதி குறைவான பிரதேசங்களில் வசித்து வருவதால், இங்கு கிடைக்கக்கூடிய பிராணிகளை உணவிற்கு வேட்டையாடியும், கிடைக்கக்கூடிய மரக்கட்டைகளைக் கொண்டு தங்கள் பாத்திரங்கள் செய்தும் தங்கள் வாழ்நாட்களைக் கழித்து வருகின்றனர். இவர்களை பொதுவாக செவிந்தியர்கள் என்று ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இவர்களின் உடலமைப்பும் கலாச்சார பண்பாடும் இந்தியர்களை போலவே இருந்ததனால் அத்தகைய பெயர் வந்தது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் அமெரிக்க பழங்குடிகளின் எண்ணிக்கை 400000 ஆகும். இவர்கள் பெரும்பாலும் தனிமையான ஒதுக்கு புறங்களில் வாழ்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதல் மீன் பிடித்தல் போன்ற தொழிலோடு, காடுவெட்டி நிலம் திருத்தி விவசாயமும் செய்கின்றனர். ஒரு பழங்குடியோடு மற்றோரு பழங்குடி சண்டை போடுதலும், சச்சரவு கொள்ளுதலும் போர்புரிதலும் இவர்களிடத்தில் பழங்கதையாக போய்விட்டன. இவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீடு, இவர்களின் திறமையையும், கைவன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. திபி (Tipi) என்னும் இவர்களின் கூடாரம் 3 கொம்புகளில் கூம்பு உருவில் அமைந்திருக்கிறது. இதன்மேல் மாப் பட்டை, பாய் போன்ற பொருட்களைக்கொண்டு மூடியுள்ளனர். விவாம் (Wigwam) என்னும் வீடு அரைகோள வடிலில் அமைந்திருக்கிறது. இதன் மேல் மரப்பட்டை அல்லது பாய்போன்ற பொருட்களைக்கொண்டு முடியுள்ளனர். இராக்குவாய் (Iroquois) இந்தியரின் மரவீடுகள் முன்னேற்றம் அடைந்ததாகும். இவை 50 அடி முதல் 100 அடி வரை ஒரே நீளமாக கட்டப்பட்டிருக்கும், இதில் சுமார் 10 குடும்பங்கள் குடியிருக்க முடியும். இந்த நீளமான வரிசையில் ஒவ்வொரு வீடும் தங்கள் கோத்திர சின்னமாகிய பீவர், காக்கை போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இக் கோத்திரச் சின்னங்கள் மாத்தில் குடைந்தெடுத்ததாகும். பல உருவங்களிலும், அளவுகளிலும் மிக நேர்த்தியாகச் செய்த பானைகள், கூடைகள், பைகள், துணிகள், அணிகள், இவர்களின் கலை ஆர்வத்தையும் திறமை யையும் நயக்கு எடுத்துக்காட்டுகிறது. காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் தோல் பைகள், பைகள், தொட்டில் மூடும் தோல் முதலியன இவர்களின் கலைத்திறமையை எடுத்துக்காட்டும்.
அமெரிக்க பழங்குடிகள், மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பழுப்பு நிறமும், கருப்பு கண்களும், உயர்ந்த கன்ன எலும்பும், நீண்ட மூக்கும் கொண்டவர்கள். இவர்கள் பாட்டைத் தலையும், கருமை ரோமமும் கொண்டிருந்தாலும், தங்கள் அகன்ற முகத்தை எப்பொழுதும் மழமழப்பாக வைத்துள்ளனர். ஒவ்வொரு பழங்குடியினிடத்திலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. பழக்கத்திலும், வழக்கத்திலும், அமைப்பிலும் நீக்ரோக்களும், அமெரிக்க இந்தியர்களும், குடியேறிய வெள்ளையர்களும் தனித்து வாழ்வதுபோல் காணப்பட்டாலும், நாளடைவில் நாகரிகத்தாலும் இனக்கலப்பினாலும் ஒன்றுபட்டு புதிய அமெரிக்க பண்பாட்டை நிறுவியிருக்கிறார்கள்.
அமெரிக்க பழங்குடிகளின் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பெரும்பாலும் வட அமெரிக்க பழங்குடியே சேர்ந்தவை. வட மேற்கு கடற்கரையில் வசிக்கும் ஹைடா இந்தியரின் மரமுகமூடி இப்பொருட்களில் ஒன்றாகும். இவர்கள் தாங்கள் உழைத்து சேர்த்த விலையுயர்ந்த பொருட்களை (கம்பளங்கள், தாமிரத் தகடுகள்) வாரி வழங்குவதில் சிறந்தவர்கள். இவர்கள் தங்களின் உபாவையும், மதிப்பையும் நிலை நிறுத்த ஒரு பெரிய "போட்லாட்சி" (Potlatch) என்னும் விருந்து வைத்து, அவ்விருந்தில் தாங்கள் சேர்த்து வைத்த பொருட்களை விருந்தினர்களுக்கு பரிசளிப்பர். இதனால் அச்சமய இவர்கள் எழ்மை நிலையை அடைந்தாலும், மற்றவர்கள் இதே போன்று செய்யும் போட்லாட்ச் விருந்தின் மூலம் இழந்த பொருட்களை பன்மடங்கு அதிகமாக பெருகின்றனர். மிருதுவான தோலினாலான பனியில் உபயோகிக்கும் இரண்டு ஜோடி காலணிகளும், தோல்பையும் தொட்டிலை மூடும் தோலும் பல வண்ண மணிகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இவைகள் சியூக்ஸ் (Slour), செய்யன் (Cheyenne) செவ்இந்தியர்களின் பொருட்களாகும். பெண்ண பீவர், காக்கை தீட்டப்பட்டிருக்கும் சேடார் மாத்து குவளை குவாகியூடில் (Kwakiuti) இந்தியரது ஆகும். கருப்பு ரோமமம், தகர கண்களும் கொண்ட மரமுகமூடி இராக்குவாய் (Iroquois) இந்தியரது ஆகும். இநாத செவிந்தியர்கள் 5 தேசங்களின் கட்டமைப்பினாலும் (wantederaoy of five Rations). லாங்ஃ பலோலின் (Longfellow) அம்ர சைஹையவாதாலில் வருவதினாலும், உலக முழுமையும் பிரசித்திப்பெற்ற வர்களாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் வட மேற்கு கடற்கரையில் வசிக்கும் குவாகியூடில் (Kwikiatl) செவிந்தியரின் மீன தூண்டில் பார்ப்பதற்கு மிக வேடிக்கையானதும், அதே சமயத்தில் மிக முக்கியமானதுமாகும். இத்தூண்டில் ஆலிபட் (Halibut) என்னும் மீன் வகையைப் பிடிக்க பயன்படுத்துகின்றனர். இத்தூண்டிலின் மேல் மனிதனின் முகத்தை வரைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. செவிந்தியர்கள் மாட்டுக் கொம்பை சீப்பு, பொம்மைகள் முதலியன செய்ய பயன்படுத்துவதுபோல் அலாஸ்கா கடற்கரையில் வசிக்கும் ட்லின்ஜிட் (Tlingit) இந்தியர்கள் மாட்டுக் கொம்பை காண்டி செய்ய உபயோகிக்கின்றனர்.
அமெரிக்க செவிந்தியர்களின் கோத்திர சின்னமும், கோத்திர வெளிமணமும் குறிப்பிடத்தக்கவை. இவர்கள் தாய்வழி மக்களாவர். நிலம் பழங்குடிக்குப் பொதுவான போதிலும், அதை உழுது பயிரிடும் குடும்பங்களுக்கும் அந்நிலத்தில் தனித்த உரிமையுண்டு.
பெண்ணுக்கு பரியம் இட்டு மணம் செய்விப்பது இவர்களின் வழக்கம். ஆணும் பெண்ணும் வயது வந்த காலத்தில் மிகக் கடினமான சடங்குகளை மேற்கொள்ளவேண்டும். இவர்களின் மதம் ஷாமனிசம் ஆகும். ஷாமன் என்னும் புரோகிதன் மானிடர் உலகத்திற்கும், இறந்தவர்கள் அல்லது தேவதைகளின் உலகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துபவன் ஆவான். இவன் மூலமாகத்தான் மனிதர்கள், இறந்த மூதாதையர்களிடத்தோ அல்லது இறந்தவர்களின் ஆவி வாழ்பவரிடத்தோ பேச இயலும். அமெரிக்க இந்தியர்கள் இறந்தவர்களைப் புதைக்கும்போது, அவர்கள் உபயோகித்த பொருட்களையும் கூடவே புதைத்து விடுகின்றனர். ஏனெனில் அப்பொருட்கள் இறந்தவர்களின் கூடவே அடுத்த உலகத்திற்கும் செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். ஆகவே இறந்தவர்களின் ஆவி மறு உலகத்தில் வாழ்கின்றது என்ற நம்பிக்கை இவர்களிடத்தில் இருக்கிறது.