புதிதாக கோல்ட் காயினை அறிமுகம் செய்த ஜியோ அம்பானி!
21 January 2025
ஜியோ பிளாட்ஃபார்ம்கள் ஜியோவின் ரிவார்டு டோக்கனாக பாலிகான் பிளாக்செயின் நெட்வொர்க்கில் ஜியோகாயினை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த பயனர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சைலெண்டாக தனது கிரிப்டோ கரன்சி காயினை அறிமுகம் செய்துள்ளதா எனக் குழப்பம் அடைந்துள்ளனர். நேற்று டொனால்ட் டிரம்ப் "டிரம்ப் மீம் காயின்” அறிமுகம் செய்ததாக அறிமுக செய்த நிலையில், இந்த செய்தி வைரலாகி வருகிறது.
Jio Coin launched: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒரு பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் Ethereum லேயர் 2 நெட்வொர்க் பாலிகோனில் JioCoin என அழைக்கப்படும் வெகுமதி டோக்கனை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், JioCoin பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை, ஆனால் iOS மற்றும் Android- அடிப்படையிலான சாதனங்களுக்கு கிடைக்கும் உலாவியான JioSphere இல் ரிவார்டு டோக்கனைப் பற்றி பல பயனர்களும் பார்த்து அதனை ஷேர் செய்தும் வருகின்றனர்.
இதுகுறித்து சமூக வலைத்தளமான X இல், பயனர் ஒருவர் பதிவில் "Jiocoin வாலட் நேரலையில் உள்ளது, அதாவது அது அவருக்கே ஆச்சரியம் அளிப்பதாக இருப்பதாகவும், அதனால் இப்பொழுது ஜியோ காயினை வாங்கி குவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.