ஆம்பூரில் மேம்பாலம் பணிகள் முடிந்து - போக்குவரத்து தொடங்கியது.
03 April 2025
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்துவும், விபத்துகளை தடுக்க சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆம்பூர் கன்னிகாபுரம் முதல் சான்றோர் குப்பம் கிருஷ்ணாலயா திருமண மண்டபம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 143 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலம் பணிகள் கடந்த 2023 ஜூன் மாதம் துவங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில் (1.04.2025) அன்று பணிகள் முடிவடைந்தது. இந்தியாவில் முதல் முறையாக புதிய தொழில்நுட்ப வடிவமைப்பில் இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் 6 வழி சாலையும், 8 மீட்டர் அகலம் சர்வீஸ் சாலையும், கழிவு நீர் செல்ல வசதி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹைதராபாத்தில், இதே வடிவமைப்பில் 4 வழி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் ஒரு தூண் அமைத்து இருபுறம் ரக்கை வடிவமைப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் (2.04.2025) அன்று பிற்பகல் முதல் போக்குவரத்து தொடங்கியது. இதனால் ஆம்பூரில் 90 சதவீதம் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். இந்தியாவில் முதல் முறையாக புதிய தொழில்நுட்ப மூலமாக ரக்கை வடிவமைப்பில் 6 வழி சாலை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Kotravai news reporter
S.sureshkumar