நாகை அரசு மருத்துவமனை அருகே ஐயங்கார் என்ற தனியார் பேக்கரி கடை செயல்பட்டு வந்தது. இந்த பேக்கரி கடையில் உரிய அனுமதியில்லாமல், டீ, உள்ளிட்ட இனிப்பு வகைகள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாக நாகை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடையில் இன்று அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சமையல் உபகரணங்கள், உணவு பொருட்கள், அடுப்பு, காய்கறிகள், பாத்திரங்கள் சுகாதாரமற்ற முறையில் ஈ மொய்த்தப்படி இருந்ததை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து நிறுவனத்தின் பெயர், காலாவதி தேதி இல்லாமல் பேக்கிங் செய்யப்பட்டிருந்த கார வகைகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உரிய உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட பேக்கரி கடையை மூடி நடவடிக்கை எடுத்தனர். நாகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த தனியார் பேக்கரி கடை; ஈ மொய்த்த பண்டங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையினை பூட்டி அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது...
கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்.