இன்று இரவுமுதல் காவல்துறையை தூங்கவிடமாட்டேன் - அண்ணாமலை

18 March 2025


தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரூ. 1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி பா.ஜ.க. சார்பில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்பட பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

மாலை 7 மணிவரை தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பா.ஜ.க. தலைவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னை அக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தற்போது விடுதலை செய்யப்பட்டார்.


இந்த இரு போராட்டமும் அடுத்த 15 நாட்களுக்குள் இரு தேதிகளில் நடக்கும். வரும் 22ம் தேதி சென்னையில் ஒரு போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. காவல்துறை பா.ஜ.க.வுக்கு மரியாதை கொடுக்காதவரை பா.ஜ.க.வும் காவல்துறைக்கு மரியாதை கொடுக்காது.

அடுத்த 2 போராட்டமும் கட்டாயமாக நடக்கும். காவல்துறை முடிந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும். தமிழ்நாட்டில் சீருடை அணிந்த போலீஸ்காரர்களுக்கு இனி தூக்கம் இருக்கக்கூடாது. இதை பா.ஜ.க. தொண்டர்களுக்கு இதை கூறிக்கொள்கிறேன்.

விதவிதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் நடந்துகொண்டே இருக்கும். இன்று இரவுமுதல் காவல்துறையை நான் தூங்கவிடமாட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என்றார்.