ஊரணியே சுத்தப்படுத்த ஊர் மக்கள் கூறியும் சுகாதார ஆய்வாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ??

04 February 2025

04:02:25 பரளச் சி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பரளச் சி கிராமத்தில் மக்கள் இரண்டு தலைமுறையாக பயன்படுத்தி வந்த ஊரணி தற்பொழுது பயன்பாடு அற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காரணம் என்னவென்றால் அந்த ஊரில் பெரிய கண் மாய் ஒன்று உள்ளது. இந்தக் கண்மாய் வழியாக ஒரு வாருகால் ஒன்று இருந்து வந்தது. அந்த வாருகால் வழியாக இந்த ஊரணிக்கு தண்ணீர் பெருக்கி மக்கள் இந்த ஊரணிய பயன்படுத்தி வந்தனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் அந்த வாருகால் பழுதடைந்து விட்டது. இந்த ஊரு னி க்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போய்விட்டது. அந்த ஊரு ணியில் உள்ள பழைய தண்ணீர் இரண்டு வருட காலமாக கெட்டுப் போய் நோய்களை உண்டாக்கக்கூடிய கொடிய கொசுக்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்த ஊரு னி க்கு இரண்டு புறமும் துவக்க பள்ளியும் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகின்றது. அங்கே படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதிக அளவு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இந்த ஊரணியில் உள்ள தண்ணீரால் தான் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருகிறது என கருதி மக்கள் அங்குள்ள சுகாதார ஆய்வாளரிடம் போய் ஊரணி தண்ணீரை வெளியேற்றுவது சம்பந்தமாக எடுத்துக் கூறினர். ஆனால் அந்த சுகாதார ஆய்வாளர் எந்த முயற்சியும் இது சம்பந்தமாக எடுக்கவில்லை. கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் பயன்படுத்தக்கூடிய அந்த ஊரணி தண்ணீர் கெட்டு போய் நோய் உண்டாக்கக்கூடியது என்று தெரிந்தும். அங்குள்ள சுகாதாரத் துறை அலட்சியம் காட்டுகின்றது. வரும் காலங்களில் நம் கொற்றவை செய்தியின் மூலமாக இந்த ஊரணிக்கு ஒரு நல்ல காலம் பிறக்கும் என மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

செய்தியாளர் : செல்ல பாண்டியன்