செங்கம் அருகே புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் உள்ளூர் பகுதி வாகன ஓட்டிகளுக்கு சுங்க கட்டண வரி விலக்கு அமல்படுத்த கோரி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதால் பரப

26 September 2024

செங்கம் அருகே புதிதாக திறக்கப்பட்ட  சுங்கச்சாவடியில் உள்ளூர் பகுதி வாகன ஓட்டிகளுக்கு சுங்க கட்டண வரி விலக்கு அமல்படுத்த கோரி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ....

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு சுங்க கட்டண வரி விலக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடி அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரியமங்கலம் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு புதியதாக சுங்கச்சாவடி திறக்கப்பட்டது இதில் உள்ளூர் வாகனங்களுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் சுங்கச்சாவடியை சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து  வாகனங்களுக்கும் சுங்க கட்டண வரி விலக்கு அளிக்க வேண்டும் என டாட்டா ஏசி வாகன உரிமையாளர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வாகன உரிமையாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முறையான ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின் வாகன உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்