செங்கம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் அதில் குயிலம் ஊராட்சியை இணைக்கப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

05 October 2024

செங்கம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாகவும் அதில்  குயிலம் ஊராட்சியை இணைக்கப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியை தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சிகளை நகராட்சியோடு இணைப்பதாக தகவல் கிடைத்ததை எதிர்த்து குயிலம் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் போளூர் செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

செங்கம் பேரூராட்சி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியாகி அதில் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கு மக்கள் தொகை அதிக அளவில் இருக்கும் வேண்டும் என்பதற்காகவும் பேரூராட்சி அருகே உள்ள குயிலம் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்கப் போவதாக தகவல் சமூக வலைதளங்கள் வாயிலாக பகிரபட்டு வருகிறது 

இதனை கண்டித்தும் குயிலம் ஊராட்சியை புதியதாக தரம் உயர்த்தப்படும் செங்கம் நகராட்சியோடு இணைக்க கூடாது என கூறி பெண்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் செங்கம் வட்டாட்சியர் கிராம மக்களிடம் செங்கம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது குறித்து முழுமையான தகவல் கிடைக்கவில்லை எனவும் அதுவரை பொதுமக்கள் அமைதி காத்திட வேண்டும் என கூறி மேலும் உயர் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்

Test 2

19 November 2024

Test

19 November 2024

இராசராசன்

11 November 2024