பிரதமர், தமிழக முதல்வர் உதவ பொதுமக்கள் கோரிக்கை !
14 January 2025
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் மதியழ கன் (36). காரைக்கால் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியரிங் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சௌந்தர்யா (29). இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்து வரும் நிலையில் 2வதாக கடந்த ஜூலை மாதம் 3ம்தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் 3 மாதம் கடந்த பின்னரும் இந்த குழந்தைக்கு தலை நிற்காமலும், கை, கால்கள் அசைவு இல்லாமலும் இருந்து வந்ததை கண்ட பெற்றோர் கடந்த மாதம் இதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக பிரசவம் நடைபெற்ற மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சென் றுள்ளனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் நரம்பு சம்பந்தப்பட்ட நோயாக இருக்கலாம் என கூறி இது குறித்து சென்னை தனியார் மருத்துவமனையினை அணுகுமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அங்குள்ள மருத்துவர் குழந் தையை பரிசோதித்து குழந்தைக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து பெங்களூ ரு பரிசோதனை மையத்திற்கு ரத்தம் எடுத்து அனுப்பினார். ரத்த மாதிரி முடிவில் பெற்றோருக்கு கிடைத்தது அதிர்ச்சி தகவல் ! நோயை சதி செய்வதற்கு இந்தியாவில் மருந்து இல்லை என்றும்
பெங்களூரில் இருந்து வரும் தனியார் மருத்துவமனை ஒன்றின் மூலம் ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி வரவழைக்கப்பட்டு இது போன்ற குழந்தைகளுக்கு செலுத்தப்படுவதாக மருத்துவர் தெரவித்துள்ளார்.
தற்போது பெங்களூர் பெல்லாரி ரோட்டில் இருந்து வரும் தனியார் மருத்துவமனையில் குழந் தையை சிகிச்சைக்காக வைத்துள்ளனர். இருப்பினும் நடுத்தர குடும்பத் தைச் சேர்ந்த தங்களது குழந்தைக்கு இதுபோன்று ஒரு நோய் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இதற்குரிய தொகை என்பது மிகப்பெரிய தொகையாக இருப்பதால் இதற்கு பிரதமரும், தமிழக முதல்வரும் உதவி செய்து அமெரிக்காவில் இருந்து ஊசியை பெற்றுக்கொடுத்து உதவிடுமாறு குழந்தை யின் பெற்றோர், பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் என தங்களால் ஈண்ட தொகையையும் இந்த குழந்தையின் மருத்துவ செலவுக்காக கொடுத்து உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கு குழந்தையின் வாழ்விற்கு தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அன்பு கரம் நீட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்த சிறிய இதயத்தை வாழவைக்க !
Account details
Account name: Soundharya P
Account number: 3129891896
IFSC code: CBIN0281901
Branch: SOTHUPAKKAM
CELL: 6369428386