நீங்கள் வரி கட்டாமல் இருக்க எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் தெரியுமா!!!

20 January 2025

உங்கள் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.. ஆனால் அதற்கு சில விதிமுறைகளும் உண்டு, அதைப் பற்றி இனி பின்வருமாறு பார்க்கலாம்.



மாதம் குறிப்பிட்ட சம்பளத்திற்க்குமேல் வாங்குபவர்களுக்கு அதாவது அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பாதிக்கும் பணத்தில் 10- 20% வரிக்கே சென்று விடும் எனக் கவலை கொள்கின்றனர். ஆனால் இதற்கு ஒரு விதி விலக்கு உள்ளது, நீங்கள் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினாலும் பூஜ்ஜியம் வரி செலுத்தலாம்.இந்திய வருமான வரித்துறை மாதம் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் கூட சட்டப்பூர்வமாக தங்கள் வரிப் பொறுப்பை பூஜ்ஜியமாகக் குறைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அதெப்படி?உதாரணமாக ஒரு நபர் மாதம் ரூ.1 லட்சம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஆண்டு சம்பளதாரர் என வைத்துக் கொள்ளலாம். அதெப்படி 12 லட்ச ரூபாய்க்கு வரி செலுத்திதானே ஆக வேண்டும் என்றால் இல்லை, அதற்கு ஒரு விலக்கு உண்டு. நீங்கள் புதிய வருமான வரியின்கீழ் இல்லாமல், பழைய வரியின்கீழ் வரியை செலுத்தும் முறையை முதலீல் வைத்திருக்க வேண்டும். அதன்மூலம் நீங்கள் ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாலும் பூஜ்ஜியம் வரிதான் வரும் அதாவது நீங்கள் வரியே கட்டத் தேதையில்லை அதுவும் பழைய வருமான வரி முறையின்கீழ் (old tax regime)

பழைய வரிமுறையின் சிறப்பம்சங்கள்!

உதாரணமாக நீங்கள் புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்திருந்தால் ஆண்டுக்கு ரூ.75,000 வரை வரி விலக்கு பெற முடியும், ஆனால் உங்கள் 12 லட்ச ரூபாய் ஆண்டு வருமானத்திற்கு ரூ.71,500 வரி செலுத்த வேண்டியிருக்கும், மேலும் புதிய வரி முறையில் பெரிய விலக்குகளும் இல்லை.

அதே பழைய வரி முறை எனில் நீங்கள் வருமான வரிச் சட்டம் பிரிவு 87A இன் கீழ் உங்கள் வருமானத்திற்கு தள்ளுபடி பெற முடியும். மேலும் பழைய வரி விதிப்பு அவரைப் பல விலக்குகளைப் பெற அனுமதித்தது, அவருடைய வரிக்குரிய வருமானத்தை ரூ.5 லட்சமாகக் குறைக்கும். அதற்கு பூஜ்ஜிய வரிதான் வரும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் கணவர் அல்லது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டு வாங்கியிருந்தால் பிரிவு 80D இன் கீழ் ரூ.50,000 விலக்கு பெறலாம். இப்பொழுது உங்கள் வரிக்குரிய வருமானம் ரூ.7 லட்சமாக மேலும் குறைத்திருக்கும்.

மேலும் நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பதால், மேலும் ரூ.2 லட்சத்தை பிடித்தம் செய்து, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கை பயன்படுத்தலாம். இது உங்கள் வரிக்குரிய வருமானத்தை ரூ.5 லட்சமாகக் குறைத்தது, இதனால் அவர் பிரிவு 87A தள்ளுபடிக்கு தகுதி பெற்று விடுவீர்.அதாவது அவர் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. அதனால் நீங்கள் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பளம் பெற்றாலும் முறையாக விலக்குகளை பெற்று பூஜ்ஜிய வரியை பெற முடியும்.