தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
04 March 2025
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இதற்கிடையே இன்றிரவு அவருக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல் வெளியாகியுள்ளது. மூச்சு திணறல் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
இதையடுத்து தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மருத்துவர் குழு அவருக்குச் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது