கலைஞர் ஆட்சியில் கட்டி கொடுத்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது..! இந்த ஆண்டு வீடுகள் கிடைக்குமா விடியல் ஆட்சியில்?

29 March 2025

சீர்காழி ஊராட்சி ஒன்றியம் பெருந்தோட்டம் ஊராட்சியில் அரசாங்கத்தால் கட்டி கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் இடியும் தருவாயில் உள்ளது இதில் ஆதிதிராவிடர் மக்கள் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெருந்தோட்டம் ஊராட்சியில் கே கே வீடு வழங்கப்பட்டு வருகிறது இதில் இடியும் தருவாயில் உள்ள காலணி வீடுகளை கொண்டவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை ஆகவே ஆகவே சம்பந்தப்பட்ட சமூகம் அதிகாரிகள் தயவுசெய்து கவனம் செலுத்தி மேற்கண்ட வீடுகளை ஆய்வு செய்து ஏழை ஆதிதிராவிடர்கள் வசிப்பதற்கு வழிவகை செய்து தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இங்கனம் மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி தியாகராஜன் சீர்காழி.


கொற்றவைசெய்தியாளர்
ஜோசப் சத்தியசீலன்
தருமபுரி