பேருந்து நிலையத்தில் வழி தெரியாமல் சுற்றிதிரிந்த சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த புறபோலீசார்!!

28 March 2025

வடசேரி பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் புறக்காவல் நிலைய போலீசார், பேருந்து நிலையத்தில் வழி தெரியாமல் அங்குமிங்கும் சுற்றி திரிந்த சிறுவனை பார்த்து அவனிடம் விசாரணை செய்தனர்.

 விசாரணையில் அவர் தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்ததாகவும், தற்போது வழி தெரியாமல் பேருந்து நிலையத்தில் சுற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

 பின்னர் புறக்காவல் நிலைய போலீசார் அந்த சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பணியில் கண்ணியத்துடன் செயல்பட்ட புறக்காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.




செய்தியாளர் 
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்