தொழிலதிபர் வீட்டில் கொள்ளை!!
20 January 2025
ஆம்பூர் தொழில் அதிபர் வீட்டில் திருடிய 3 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நூருல்லாபேட்டை சேர்ந்த ரஃகிபூர் ரஹ்மான் வயது (45). சொந்த வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 12.01.2025 அன்று நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகள், 1 வைர மோதிரம், மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றார்கள். இதைக் குறித்து 13.01.2025 அன்று ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இப் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நகர துணை கண்காணிப்பாளர் குமார் மற்றும் ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தனி படை அமைத்து காவல் உதவி ஆய்வாளர் தீபன் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மர்ம நபர்கள் சென்னை எக்மோர் மூர் மார்க்கெட்டில் இருக்கிறார்கள் என்று காவலர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக உதவி ஆய்வாளர் தீபன் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னைக்குச் சென்று மூர் மார்க்கெட்டில் 3 நபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் 3 மர்ம நபர்களிடமிருந்து 6 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 வைர மோதிரம் பறிமுதல் செய்தனர். A1 தினேஷ் வயது (23) S/O முருகன் சென்னை எக்மோர், A2 தாஸ் வயது (30) S/O சேட்டு சென்னை மூர் மார்க்கெட், A3 அப்துல் கலாம் வயது (25) S/O முகமது அனீஸ் குரேஷி வாணியம்பாடி இவர்களை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 3 கொள்ளையர்களை 6 நாட்களில் பிடித்து கைது செய்ததற்கு ஆம்பூர் மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.