கொரோனா வருவதை முன்பே கணித்தவரின் புதிய கணிப்பு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது?

05 February 2025

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த நிலையில், நடப்பாண்டில் நிகழப் போகும் சம்பவங்கள் பற்றி, பலரும் தங்களது கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில், பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'ஹிப்னோ தெரபிஸ்ட்' ஆன, நிக்கோலஸ் அஜுலா என்பவர், 'இந்த ஆண்டில், மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக வரும்...' என, கணித்துள்ளார்.

'இந்த ஆண்டில், உலகளாவிய பேரழிவு ஏற்படும்...' என்ற, பாபா வங்காவின் அச்சுறுத்தும் கணிப்பு, ஏற்கனவே கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், நிக்கோலஸ் அஜுலாவின் கணிப்பும், பேசு பொருளாகி உள்ளது.

இவர், கடந்த, 2018ல், 'கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்...' என, முன்கூட்டியே கணித்துக் கூறியிருந்தார்.

இதன்படியே, 2019ம் ஆண்டு இறுதியில், 'கொரோனா' தொற்று, உலகம் முழுவதும் பரவி, பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும், டொனால்டு ட்ரம்பின் அதிபர் தேர்தல் வெற்றி, செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, நோட்ரே டேம் கதீட்ரலில் ஏற்பட்ட தீ, ரோபோ படைகளின் வளர்ச்சி ஆகியவையும், அவருடைய கணிப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்தவை தான்.

அவரது தற்போதைய கணிப்பும், முக்கியத்துவம் பெற்று வருகிறது. தற்போது, 'மூன்றாம் உலகப் போர், 2025ல் நிகழும். இது இரக்கமே இல்லாத ஆண்டாக இருக்கும். மதம் மற்றும் தேசியத்தின் பெயரால், மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வர். அரசியல் படுகொலைகள் நடக்கும்.

'அதிக மழை, பேரழிவு தரும்; வெள்ளம் இருக்கும். இதனால், லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடையும். கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும். பணவீக்கம் அதிகரிக்கும். பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும்...' என, கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன