பயனற்று கிடக்கும் பாலம் வேறு பாலம் வேண்டும் என மக்கள் கோரிக்கை. அருப்புக்கோட்டை தாலுகா செங்குளம் கிராமத்தில் இரு சமூகத்திற்கும் இடையே பிரச்சனை தூண்டும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட பாலம். அந்தப் பாலம் ஆனது கட்டி இரண்டு வருடம் ஆகியும் இதுவரை அந்த பாலத்தை பயன்படுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர். காரணம் என்னவென்றால் தண்ணீர் செல்லும் இடத்தை விட்டு விட்டு தனக்கு ஓட்டு போடவில்லை என்ற ஒரே ஒரு காரணத்தால் மக்கள் செல்லாத வேற ஒரு இடத்தில் அந்த பாலத்தை கட்டியுள்ளனர். எனவே மக்கள் இன்னும் பள்ளிக்கு செல்வோர் கல்லூரிக்கு செல்வோர் வேலைக்கு செல்வோர் என சுமார் 60க்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீரிலே கடந்து செல்கின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் பீட்டர் என்பவரிடம் கேட்டபோது நாங்கள் 40 வருட காலமாக அந்த கஷ்டத்தை தான் அனுபவிக்கின்றோம். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அரசு கவனத்திற்கும் எடுத்துச் சென்று எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த ஆட்சியில் இனிமேல் நடக்காது. ஆட்சி மாறினால் கண்டு நல்லது நடக்குமா என்று எதிர்பார்ப்போம் என கண்ணீர் மல்க வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். அருப்புக்கோட்டை
செய்தியாளர்.
பி செல்ல பாண்டியன்