ஜாடியை குலுக்கியது யார் ?
19 January 2025
ஒரு ஜாடியில் 100 கருப்பு எறும்புகளையும், 100 சிவப்பு எறும்புகளையும் ஒன்றாகப் போட்டால் எதற்கும் ஒன்றும் ஆகாது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் நீங்கள் ஜாடியை கடுமையாக குலுக்கினால், எறும்புகள் ஒன்றையொன்று கொல்லத் தொடங்கும். சிவப்பு எறும்புகள் கருப்பு எறும்புகளை தங்கள் எதிரிகளாகவும், கருப்பு எறும்புகள் சிவப்பு எறும்புகளை தங்கள் எதிரிகளாக கருதிக் கொல்லும். ஆனால் உண்மையான எதிரி ஜாடியை குலுக்கியவனே..!
மனித சமூகத்திலும் இதேதான் நடக்கிறது. ஆக, ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் முன், ஜாடியை குலுக்கியது யார் என்று சிந்திக்க வேண்டும்!
படித்ததில் பிடித்தது !