ஓடும் பேருந்தில் 17 சவரன் நகைகளை திருடிய கும்பலில் ஒருவர் கைது.

25 January 2025

வாணியம்பாடியில் ஓடும் பேருந்தில் 17 சவரன் தங்க நகை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 1வர் கைது.


வேலூர் மாவட்டம் தொரப்பாடி பலவன்சாத் குப்பம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம்,(52)மற்றும் அவரது மனைவி லதா (47) ஆகியோர் கடந்த மாதம் 12ம் தேதி வேலூர் பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்ல அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செயின், மோதிரம், ஆரம் உள்ளிட்ட 17 சவரன் தங்க நகைகள் வைத்திருந்த துணிபையை தம்பதியர் பேருந்து மேல் உள்ள தளத்தில் வைத்து பயணித்துள்ளனர். பேருந்து வாணியம்பாடி பைபாஸ் சாலை நியூடவுன் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு புரப்பட்டது. அப்போது திடீரென தம்பதியர் பேருந்து மேல் தளத்தில் வைத்துள்ள பையை பார்த்தபோது பை காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தி உள்ளனர். கீழே இறங்கி சுற்று பகுதிகளில் தேடிப்பார்த்து உள்ளனர். கிடைக்காத பட்சத்தில் உடனே சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து நியூடவுன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாதனூர் வரை இருந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் அன்பரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், பார்த்திபன் மற்றும் வாணியம்பாடி குற்றப்பிரிவு காவலர்கள் தேசிங்கு, ஐயப்பன், விஜயகுமார், அருண், முரளி தனிப்பிரிவு தலைமை காவலர் மூர்த்தி ஆகியோர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது சந்தேகத்தின் அடிப்படையில் அங்கே நின்று இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆம்பூர் அடுத்த மாதனூர் உடையராஜபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாணிக்கம் (35) என்பதும் கடந்த மாதம் ஓடும் பஸ்ஸில் 17 சவரன் தங்க நகை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை வாணியம்பாடி நகர ‌காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சுப்பிரமணியிடமிருந்து 17 சவரம் தங்க நகை பறிமுதல் செய்தனர். மேலும் சுப்ரமணி மீது வழக்கு பதிவு செய்து ஆம்பூர் நீதிமன்றம் நடுவர் முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.