கீரனூர் கிராமத்தில் தி.மு.க கூட்டத்திற்கு இடையில் ஆதி திராவிட மக்கள் கோரிக்கை மனு!!!

06 February 2025

.



சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகாமையில் இருக்கக்கூடிய ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவிலில்( கீரனூர் கொல்லங்குடி விட்டனேரி அரியாங்குறிச்சி மேப்பல் இராணியூர்) ஆகிய ஆறு ஊரைச் சேர்ந்த பட்டியலின மக்கள் ஒன்பதாம் திருநாளை கொண்டாடுகின்றனர். 

இதன் அடிப்படையில் கோயில் அறங்காவலர் நியமனத்தில் ஆதி திராவிட மக்களை தவிர்த்து கோவில் அறங்காவலர்களை நியமனம் செய்ததை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில். 

இன்று கீரனூர் கிராமத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஒன்று நடைபெற்றது அந்த கூட்டத்திற்கு இடையில் சென்று இந்த ஆறு ஊரைச் சேர்ந்த 60 நபர்களுக்கும் மேலானவர்கள் சென்று கோயில் அறங்காவலர் நியமனத்தில் பட்டியல் இன மக்களை சேர்க்க வேண்டும் என கோரிக்கை மனுவை திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளிடம் அளித்தனர். 


இந்தக் கோரிக்கை மனுவை ஏற்ற திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனால், பட்டியலின மக்களுக்கு உண்மையான நீதியை வழங்குவதற்கான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தியாளர்:-
சிவ பிரசாத்.கா