உலகிலேயே முதல் “Carbon- Neutral” குழந்தை… சென்னையை சேர்ந்த தம்பதி சாதனை

25 January 2025


சென்னையை சேர்ந்த தினேஷ் -ஜனக நந்தினி தம்பதியர் தங்களது குழந்தை ஆதவியை உலகின் முதல் Carbon- Neutral குழந்தை என அறிவித்ததிருக்கிறார்கள். உலகில் மனிதர்கள் மரத்தை வெட்டிக்கொண்டு வருகிறார்கள். மரம் இருந்தால்தான் சுத்தமான ஆக்சிஜன் காற்று நமக்கு கிடைக்கும். மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடுக்கு நிகராக அதிக மரங்கள் இருந்தால்தான் அது சமன் செய்யும். அந்த வகையில் தான் இவர்களும் புது முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

   
தங்கள் குழந்தை பிறந்த பிறகு எதிர்காலத்தில் அதன் ஆயுட்காலம் முழுவதும் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு அளவை கருத்தில் கொண்டு அதன் வாழ்நாளில் ஆயிரம் மரங்களை நடுவதன் மூலம் உலகின் முதல் கார்பன் நியூட்ரல் பேபி என்ற பெருமையை தங்களது குழந்தை ஆதவிக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் தினேஷ் ஜனக நந்தினி ஜோடி.


2023 ஆம் ஆண்டு பிறந்த இந்த குழந்தை வாழ்நாளை கருத்தில் கொண்டு ஆயிரம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறார்கள். இதன் மூலம் மக்களும் இதே போல் செய்ய வேண்டும் என்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு தனி மனிதனும் தங்கள் வாழ்நாளில் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அளவை சமன்படுத்த ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுவிட்டால் பூமி பச்சை பசேல் என்று செழுமையாக மாறிவிடும் புவி வெப்பமயமாதல் க்ளோபல் வார்மிங் போன்ற எந்த பிரச்சினையும் இருக்காது என்று கூறுகின்றனர்.

அ.ரவி
கொற்றவை செய்தியாளர்
போரூர், சென்னை