பேருந்து நிலையத்திற்குள் பஸ் வராததால் ரோட்டில் நின்று பஸ் ஏறுகின்ற பொதுமக்கள்!!

04 February 2025

04:02:25 அருப்புக்கோட்டை. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காந்தி நகரில் பஸ் ஸ்டாப் ஒன்று உள்ளது. அருப்புக்கோட்டை சுற்றளவில் கிட்டத்தட்ட 200 கிராமங்களுக்கு வந்து செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே சென்று ஆட்களை ஏற்றி இறக்கி வருகின்றது. இந்த பஸ் ஸ்டாண்ட் ஆனது மதுரை திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்டு செயல்படுகிறது. மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் இங்கே வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது கொஞ்ச காலங்களாக வந்து செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் ஸ்டாண்டிற்கு உள்ளே வராததால் மக்கள் அனைவரும் கடும் வெயிலில் காத்திருக்கின்றனர். இதற்காக மக்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் என்னவென்றால் . மெயினில் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே வந்து ஏற்றிச் செல்ல வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மக்களுக்கு பெரிதும் பயனடைவர்.

கொற்றவை செய்தியாளர்

செல்ல பாண்டியன்.