பழுதடைந்த மின் கம்பம் சரி செய்ய மறுக்கும் மின்சார வாரியம்..!!

28 January 2025

. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பரளச் சி கிராமத்தில் முற்றும் சேதம் அடைந்து காணப்படும் மின் கம்பம். அந்த கிராமத்தில் நாகபாண்டியன் என்பவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள மின் கம்பம் இந்த கம்பம் ஆனது பொதுவான மின்கம்பமாக காணப்படுகிறது. இந்த கம்பத்தில் மொத்தம் மூன்று சர்வீஸ்கள் உள்ள நிலையில் முற்றிலும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.இந்த கம்பத்தை சரி செய்வதற்காக மின்வாரிய அலுவலரிடம் போய் புகார் அளித்தனர். அதற்கு மின்வாரிய அலுவலர் தற்போது மின்கம்பம் இல்லாத காரணத்தால் தற்போது மாற்ற இயலாது என கூறிவிட்டனர். மின்வாரியத்தில் உள்ள ஒரு அலுவலரிடம் கேட்டபோது மின்கம்பம் நிறைய உள்ளது உள்ளே உள்ள அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்தால் மின்கம்பம் உடனே மாற்றித் தருவார் எனக் கூறுகிறார். மக்களுக்கு 24 மணி நேரமும் சேவை செய்யக்கூடிய மின்வாரிய ஊழியரே இது போன்ற மனநிலையில் இருந்தால் மக்கள் என்ன செய்ய முடியும். இதேபோன்ற நிலையில் இந்த மின் கம்பம் நீடித்தால் உயிரே காவு வாங்கும் அளவிற்கு போய்விடும். அந்த மின்வாரியமானது கிட்டத்தட்ட 40 கிராமங்களுக்கு பயன்படக்கூடிய மின்வாரியமாக செயல்பட்டு வருகின்றது. எனவே இந்த நிலையத்தில் உள்ள முக்கிய நிலை பொறுப்பில் இருக்கக் கூடிய அதிகாரிகளை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.