சிக்னல் கிடைக்கவில்லையா ? அரசு போட்ட திடீர் உத்தரவு!!!
21 January 2025
ஜியோ, (Jio) பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஏர்டெல் (Airtel) பயனர்கள் இப்போது தங்கள் சொந்த சிம் சிக்னலை இழந்தாலும் (no signal) கூட, அருகில் கிடைக்கக்கூடிய எந்த நெட்வொர்க் சிக்னலை வேண்டுமானாலும் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 17 அன்று, இந்திய அரசாங்கம் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) சேவையை அறிமுகப்படுத்தியது. அதாவது DBN நிதியுதவியுடன் இயங்க கூடிய மொபைல் டவர்கள் மூலம் Jio, Airtel, BSNL பயனர்கள் இனி எந்த நெட்வொர்க் டவரில் இருந்தும் 4G சேவைகளை அணுக முடியும்.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் (Indian telecom sector) பல புதுப்புது மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது. 2025 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதில் இருந்து, பல்வேறு விதமான புதிய விதிமுறைகள், புதிய சேவைகள் என்று பல புதிய மாற்றங்களை டெலிகாம் வாடிக்கையாளர்கள் (new rules for telecom customers) சந்தித்து வருகிறார்கள். இந்த வரிசையில், தற்போது, இந்திய அரசாங்கம் இந்தியாவில் புதிதாக இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (Intra Circle Roaming) என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) சேவை என்றால் என்ன? இது எப்படி இந்திய மக்களுக்கு பயனளிக்க போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். ICR சேவையின் உதவியோடு, இனி ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவர்களின் சொந்த சிம் கார்டு சேவையில் நெட்வொர்க் கிடைக்காத போது (no signal in own SIM card), அருகில் இருக்கும் DBN டவர்களில் இருந்து நெட்வொர்க்கை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பாரத் நிதி (Digital Bharat Nidhi - DBN) உதவியுடன் நிறுவனப்பட எந்தவொரு டெலிகாம் நெட்வொர்க் டவராக (mobile tower) இருந்தாலும், டெலிகாம் வாடிக்கையாளர்கள் எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் அருகில் உள்ள DBN நிதியளிக்கப்பட்ட டவர் மூலம் 4G சேவையை அணுக முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது நெட்வொர்க் சிக்கலால் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவ போகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
அரசாங்க நிதியுதவியுடன் இயங்க கூடிய மொபைல் டவர்களில் உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை (TSPs) அனுமதிப்பதன் மூலம், வெவ்வேறு நெட்வொர்க்குகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒரே டவரில் இருந்து 4G இணைப்பை அனுபவிக்க முடியும். இந்த அணுகுமுறை ஒவ்வொரு வழங்குநருக்கும் பல டவர்களுக்கான தேவையைக் குறைக்கிறது, இதனால் ஒட்டுமொத்தமாக டவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.இதன் விளைவாக, அதிக செலவில்லாமல் மேம்பட்ட மொபைல் சேவைகளை (mobile network service) பொதுமக்கள் அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சி 35,400-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு நம்பகமான 4G இணைப்பை வழங்கப்போகிறது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமே 27,000 டவர்களுடன் நடைமுறை:முதற்கட்டமாக சுமார் 27,000 டவர்கள் இந்த பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார். DBN ஆல் நிதியளிக்கப்பட்ட 4G மொபைல் தளங்களில் ICR சேவை தொடங்கப்படுவதாக அறிவித்தார். இந்தியாவின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான BSNL, Airtel மற்றும் Reliance Jio ஆகியவை DBN நிதியளிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் தங்கள் நெட்வொர்க்குகளைப் பகிர்ந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.தெரியாதவர்களுக்கு, DBN என்பது இதற்கு முன்பு உலகளாவிய சேவை கடமை நிதி (USOF) என்றழைக்கப்பட்டது. கிராமப்புறங்கள் (villages) மற்றும் தொலைதூர இடங்களில் மொபைல் சேவை இணைப்பை உறுதி செய்வதற்கான மொபைல் டவர் இன்ஸ்டாலேஷன் திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மொபைல் சேவை இணக்கமில்லாத இடங்களில் மக்கள் இணைப்பை பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.