புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல்...

26 September 2024

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல்...


செங்கீரை கிராம நிர்வாக அலுவலகம் காலி செய்யப்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் திருமயம்-அரிமளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது-இதனையடுத்து 50க்கும் மேற்பட்டோர் அடித்து உதைத்து கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் சுமார்‌ 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் செங்கீரை ஊராட்சியின் சில பகுதிகளை பிரித்து ஆயிங்குடி மற்றும் ராயவரம் ஆகிய ஊராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.ஊராட்சியை பிரிப்பதற்கு பொதுமக்களிடமும் எந்த கருத்தும் கேட்காமல் வெளியான இந்த அறிவிப்பினால் வருங்காலத்தில் செங்கீரை ஊராட்சி இல்லாமல் போகும் எனவும்,இதனால் செங்கீரை ஊராட்சியின் வருவாய் பாதிக்கப்படுவதாகவும் மேலும் ஒன்றாக இருந்த ஊராட்சி பொதுமக்களுக்கிடையில் பிரிவு ஏற்படுவதாகவும் கூறி செங்கீரை ஊராட்சி பிரிக்கக் கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நேற்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டை ரேஷன் அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை தாசில்தார் பரணியிடம் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை உள்ளிட்ட வேலை திரும்ப ஒப்படைக்க முயன்றனர்.இந்நிலையில் நேற்று இரவு செங்கீரை ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை  வருவாய்துறையினர் காலி செய்து ராயவரத்தில் புதிதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கு பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. செங்கீரை கிராமத்தில் தங்கள் ஊரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மாற்றப்படுவதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருமயம் அரிமளம் சாலை மற்றும் லேனா விளக்கு அரிமளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சாலை மறியல் போராட்டத்தால் செங்கீரை ஊராட்சியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்