மக்களுக்காக இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் . மக்கள் உரிமைத் தொகை ,கல்வி கடன் தள்ளுபடி!
05 February 2025
சென்னை: கடந்த 48 மணி நேரத்தில் மகளிர் உரிமை தொகை மற்றும் கல்விக்கடன் கடன் தள்ளுபடி தொடர்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்
ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
முக்கியமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் தங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை தற்போது தமிழ்நாடு அரசு ஏற்று ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது
தமிழகத்தில் நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கையாக கல்விக் கடன் தள்ளுபடி இருந்து வந்தது. பல்வேறு கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆளும் திமுகவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்கள் பலரும் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக தீவிரமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
Also Read
"காதல் நாயகன் பார்வை பட்டதும்” டிடி வெளியிட்ட க்யூட் வீடியோ! குவியும் வாழ்த்து.. உருக்கமான வேண்டுகோள்
"காதல் நாயகன் பார்வை பட்டதும்” டிடி வெளியிட்ட க்யூட் வீடியோ! குவியும் வாழ்த்து.. உருக்கமான வேண்டுகோள்
tamil nadu government notification ration magalir urimai thogai
முக்கியமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் தங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை தற்போது தமிழ்நாடு அரசு ஏற்று ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது, என்று அறிவித்துள்ளனர்
அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த திருமணம் ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.. அந்த விண்ணப்பங்கள் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பே பதில் அளித்திருந்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம்.