தேவகோட்டையில் ஓபிஎஸ் பேட்டி: அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கருத்து!!

25 February 2025


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும், தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் இதை நம்புகின்றனர் என்று கூறினார்.

ஓபிஎஸ், "தூய அதிமுக தொண்டர்கள் வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள்" எனக் கூறி, அதிமுகவின் வரலாற்றை விளக்கினார். மேலும், விஜயின் வெற்றி மக்கள் தீர்ப்புக்கு பிறகே தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து பேசப்படும் மற்றும் முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.