விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள பரளச் சி கிராமத்தில் 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் மருத்துவத்துறை சார்ந்த செவிலியர் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த நன்னாளில் மக்களுக்கு பயன்படக்கூடிய மானிய கோரிக்கைகள் மற்றும் மக்களுக்கு பயன்படக்கூடிய பல நலத்திட்ட உதவிகளைப் பற்றி கூறினர். மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளைப் பற்றி அலுவலர்களிடம் எடுத்துக் கூறினர். உங்கள் குறைகள் அனைத்தையும் நாங்கள் சரி செய்து தருவோம் என ஊராட்சி செயலரின் வாயிலாக வாக்குறுதி அளித்தனர். மருத்துவத்துறையின் சார்பாக மக்களுக்கு ஏற்படும் தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் தொழு நோயை ஒலிப்பது சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் தடுப்புகளைப் பற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஊராட்சித் தலைவர் பதவிக்காலம் முடிந்து நடத்தப்பட்ட முதல் கிராம சபை கூட்டமாகும்.
கொற்றவை செய்தியாளர் .
P செல்ல பாண்டியன்