விருதுநகர் அருகே கணவரை பிரிந்த புதுப்பெண் முத்துலட்சுமி..
18 February 2025
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இனாம்செட்டிகுளம் ஒத்த பட்டியைச் சேர்ந்த 25 வயதாகும் முத்துலட்சுமி நர்சிங் படித்துள்ளார். இவர் ராஜபாளையம் மேல ஆவாரந்தையை சேர்ந்த கோபிநாத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 4 மாதம் முன்பு சென்னையில் திருமணம் செய்துள்ளனர். திடீரென சண்டையில் கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் முத்துலட்சுமி வருத்தத்தில் இருந்துள்ளார்.இவர் காதலர் தினத்தன்று எடுத்த முடிவு குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது.
காதல் திருமணம் செய்யும் சிலர் எதார்த்தங்களை உணர மறுக்கிறார்கள்.. பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் யார் சொல்லியும் கேட்காமல் மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்கிறார்கள்.. ஆனால் 2 மாதம் வாழ்ந்த பின்னர் வாழ்க்கையில் கஷ்டம் வரும் போது திடீரென சண்டை போட்டு பிரிந்து இருக்கிறார்கள். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்க்கை துணையாக வருபவர்கள் தவறான முடிவெடுக்கிறார்கள்
இதுபோன்ற வாழ்க்கையில் சவாலான நேரங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல், பலர் முட்டாள்தனமாக முடிவெடுப்பது அதிகரித்து வருகிறது. எந்த ஒரு பிரச்சனைக்கு வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது அல்ல.. இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்களில் சிலர், சரியான புரிதலுடன் வாழத் தெரியாமல் ஆத்திரத்திலும் அவசரத்திலும் முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்வது அதிகரித்துவிட்டது. சவால்களை எப்படி எதிர்கொள்வது, பிரச்சனைகள் வந்தால் அதனை எப்படி கையாள்வது, அவமானம் வந்தால் அதனை எப்படி எதிர்கொண்டு எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் பலர் சிக்கலில் தவித்து வருகிறார்கள்.