கிராமத்தில் மக்களுக்கு கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் பயன்படுத்த முடியாமல் செயல்பாடு அற்று கிடைக்கின்றது.!!!

31 January 2025

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் மேலையூர் கிராமத்தில் மக்களுக்கு கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் பயன்படுத்த முடியாமல் செயல்பாடு அற்று கிடைக்கின்றது. மேலையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கழிப்பிடம் பாம்புகளின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த கழிப்பறை கட்டிடத்தைச் சுற்றி முட்புதர்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெருமளவு பொது இடங்களில் பயன்படுத்துகின்றனர். அங்குள்ள ஊராட்சியில் கேட்டபோது இந்த கழிப்பறை கட்டிடம் மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் மக்கள் இதனை சுத்தமாக வைப்பதில்லை. பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்துகின்றனர் எனக் கூறுகிறார். ஆனால் மக்கள் கூறுகையில் இந்த கழிப்பறை கட்டிடத்துக்கு பராமரிப்பிற்கு ஆள் போடவில்லை. சரிவர தண்ணீர் வரவில்லை. இதனாலே கட்டிடம் இந்த நிலைக்கு போய்விட்டது என கூறுகிறார்கள். மக்களுக்கு தேவையான ஒன்றே நிர்வாகம் சரியாக பயன்பாட்டிற்கு கொண்டு வராததால். இதைப் போன்ற தேவையற்ற செலவுகள் ஆகின்றன. நிர்வாகம் அதனை சரி செய்து மக்களுக்கு தேவைப்படும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

செய்தி யாளர்.

செல்லப்பாண்டியன்