சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் மின்னொளி கபடி போட்டி..

31 January 2025

ஸ்ரீ கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம் மற்றும் மாகா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கபாடிப் போட்டி.


சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் ஸ்ரீ கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம் மற்றும் மாகா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கபாடிப் போட்டி (14/2/2025) அன்று 8 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த கபடி போட்டியானது கொல்லங்குடியில் இருக்கும் கொல்லங்குடி திடலில் நடைபெறும் என்றும் இந்த போட்டிக்கான எடையானது(6:55+3(A) நுழைவு கட்டணம் 501 என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு

முதல் பரிசு
8,001
6 அடி கோப்பை

இரண்டாம் பரிசு
6,001
5 அடி கோப்பை

மூன்றாம் பரிசு
4,001
4 அடி கோப்பை

நான்காம் பரிசு
2,001
3 அடி கோப்பை வழங்கப்பட உள்ளது. 

அது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் 5,6,7,8, ம் இடம் பிடிக்கும் அணிகளுக்கும் வெற்றி கோப்பை வழங்கப்பட உள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த போட்டியில் பங்குபெறும் அணிகளுக்கு சில நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது.

(நிபந்தனைகள்):-
சாதி ரீதியான பனியன்கள் அணிந்து விளையாட கூடாது.

ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.

நடுவர் தீர்ப்பே இறுதியானது, உறுதியானது.

முதல் சுற்றில் ஆடும் வீரர்கள் இறுதிவரை ஆட வேண்டும்.

மது அருந்திவிட்டு விளையாட அனுமதி இல்லை

ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு போன்ற நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புக்கு:

9159993451

9843523605

8489174190


செய்தியாளர்:-
சிவப்பிரசாத்.கா