சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் வட மஞ்சுவிரட்டு
19 January 2025
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் KR.L. முருகானந்தம் நினைவாக மூன்றாம் ஆண்டு நடைபெற்ற வட மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 20 காளைகளும்,180 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வட மஞ்சுவிரட்டின் போது
போட்டிக்கு கலந்து கொள்ள வந்த அனைத்து காளைகளுக்கும் மரியாதை செய்யப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாடுபிடி குழுவினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த வட மஞ்சுவிரட்டு நிகழ்வினை நாட்டரசன்கோட்டை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இந்த வட மஞ்சுவிரட்டின் நான்கு நபர்கள் காயமடைந்தனர்.
ஒருவர் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
செய்தியாளர்:- சிவபிரசாத் .கா