சிவகங்கையில் ட்ரோன் கேமரா பறக்க தடை !
20 January 2025
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21,22 ஆகிய தேதிகளில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை, வளர்தமிழ் நூலகம் ஆகியவற்றை திறந்து வைக்கவும், நலத்திட்டங்கள் வழங்க வருகை தர உள்ளார். ஆகையால் முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையின்போது சிவகங்கை காரைக்குடியில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.