இரவில் வெட்டிய மர்மகும்பல்!!

23 January 2025

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே பி.அழகாபுரி கிராமத்தில் இரவு வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் (வயது 23) என்ற இளைஞர் வெட்டி படுகொலை.


கீழச்சிவல்பட்டி அருகே அயணிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சசிக்குமார்(23). தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்தநிலையில் தாயார் மாரிக்கண்ணுவும் இவரும் கீழச்சிவல்பட்டி அருகே பி.அழகாபுரி கிராமத்தில் வசித்து வந்தனர். சிங்கப்பூரில் பணிபுரியும் இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இரவு சசிக்குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் வீட்டின் முன்பு சத்தம் கேட்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வீட்டின் வாசற்படியிலேயே இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதி புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் திருமயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்மந்தமாக கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த வடக்கு இளையாத்தங்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் வெற்றிவேல் (26) என்பவரை திருமயம் போலீசார் கைது செய்து கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர்:-
சிவப்பிரசாத்.கா