மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன்!!
23 January 2025
நேதாஜி பிறந்தநாள் விழா மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன்
நேதாஜியின் 128 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனையின் முன்பாக இருக்கக்கூடிய சுதந்திர போராட்ட தியாகி நேதாஜியின் திருவுருவ சிலைக்கு அதிமுக சிவகங்கை மாவட்ட எம்.எல்.ஏ செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.